Karnataka strike: கர்நாடகாவில் நாளை.. போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்! வொர்க் பிரம் ஹோமுக்கு மாறிய ஐடி நிறுவனங்கள்!
பெங்களூர்: நிலுவை ஊதியத்தை விடுவிக்க வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக அரசு பேருந்து போக்குவரத்து கழகத்தின் ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கின்றன. இதனால் ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் 4 போக்குவரத்து கழகங்கள் இருக்கின்றன. இவைகள் மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் சேவையை வழங்கி வருகின்றன.

1. கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC)
2. பெங்களூர் பெருநகர போக்குவரத்துக் கழகம் (BMTC) (பெங்களூருக்குள் இயங்குகிறது)
3. வடகிழக்கு கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகம் (NEKRTC)
4. வடமேற்கு கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகம் (NWKRTC)
இந்த 4 போக்குவரத்து கழகங்களும் ஒவ்வொரு நாளும் சுமார் 1 முதல் 1.2 கோடி மக்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கின்றன. இதில் மகளிருக்கான இலவச பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் தினமும் 10 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பயணிக்கின்றனர்.
இப்படி இருக்கையில் போக்குவரத்து ஊழியர்களுக்கான கோரிக்கைள் சரியாக நிறைவேற்றப்படுவதில்லை என்று தொடர்ந்து புகார்கள் எழுந்திருக்கின்றன. உரிய ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பது, நிலுவை தொகையை கொடுக்காமல் இருப்பது, காலிப்பணியிடங்களை நிரப்பாமல், இருக்கும் ஊழியர்களை வேலை நேரத்தை தாண்டி வேலை வாங்க வைப்பது, அதற்கான உரிய ஊதியம் கொடுக்காமல் உழைப்பை சுரண்டுவது என பல்வேறு குற்றச்சாட்டுகளை தொழிற்சங்கங்கள் எழுப்பியிருந்தன.
இதனையடுத்து ஆக.5ம் தேதி வேலை நிறுத்தத்தை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதனையடுத்து அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் உறுதியாக இருக்கின்றன. எனவே மாநிலம் முழுவதும் 20,000 - 25,000 பேருந்துகள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிலைமையை சமாளிக்க 10,000 தனியார் பேருந்துகளை இயக்க அரசு அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில் ஐடி நிறுவனஙகள் தங்கள் ஊழியர்களை விட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளன. ஸ்ட்ரைக் காரணமாக நாளை கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
-
கல்லூரி காதலனுடன் கள்ளக்காதல் + ரூ.1000 கோடி சொத்து.. மகளையே கொன்று நாடகமாடிய பெங்களூர் பெண் -
பெங்களூர் பன்னரகட்டா ரோட்டில் மெட்ரோ ரயில் சேவை.. வெளியான குட்நியூஸ்! செம -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications