ஆணவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி.. அடித்து ஆடும் சித்தராமையா.. கர்நாடக அரசின் ‘இவ நம்மவ’ சட்டம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சாதி மறுப்புத் திருமணங்கள் மற்றும் சுய விருப்பத்தின் அடிப்படையில் இணையும் ஜோடிகளைப் பாதுகாக்கவும், ஆணவக் கொலைகளைத் தடுக்கவும் கர்நாடக அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தைக் கொண்டு வரவுள்ளது. முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, இதற்கான "கர்நாடக திருமணத் தேர்வு சுதந்திரம் மற்றும் கெளரவத்தின் பெயரிலான குற்றங்கள் தடுப்பு மசோதா - 2026" என்ற வரைவு மசோதாவைத் தயார் செய்துள்ளது.

Honor karnataka

பின்னணி: தாரவாடு துயரம்

கடந்த டிசம்பர் 21, 2025 அன்று தாரவாடு மாவட்டத்தில் மான்யா என்ற 20 வயது லிங்காயத் சமூகப் பெண், பட்டியலின வாலிபரைத் திருமணம் செய்ததற்காக அவரது தந்தையாலேயே படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இத்தகைய கொடூரங்களைத் தடுக்கவே இந்தச் சிறப்புச் சட்டம் கொண்டு வரப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

'இவ நம்மவ' - பசவண்ணரின் தத்துவத்தில் ஒரு சட்டம்

12-ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதி பசவண்ணரின் "இவ நம்மவ" (இவர் நம்மவர்) என்ற தத்துவத்தின் பெயரால் இந்த மசோதா அழைக்கப்படுகிறது. சாதிப் பாகுபாடற்ற, அனைவரும் ஒன்றே என்ற பசவண்ணரின் விழுமியங்களை உயர்த்திப் பிடிக்கும் வகையில் இச்சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மசோதாவின் முக்கிய அம்சங்கள்:

கடுமையான தண்டனை: ஆணவக் கொலைகளில் ஈடுபடுவோருக்குக் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். தாக்குதலில் ஈடுபடுவோருக்கு காயத்தின் தன்மையைப் பொறுத்து 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.

கைது நடவடிக்கைகள்: இந்தச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகள் பிணையில் வரமுடியாத (Non-bailable) பிரிவுகளின் கீழ் வரும்.

சமூகப் புறக்கணிப்புக்குத் தடை: சாதி மறுப்பு ஜோடிகளை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது, அவர்களுக்கு வேலை மறுப்பது, சமூக சேவைகளைத் தடுப்பது போன்றவை தண்டனைக்குரிய குற்றங்களாக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு இல்லங்கள்: அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஜோடிகளுக்கு அரசு சார்பில் பாதுகாப்பான தங்குமிடங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படும்.

வேதிகே அமைப்பு: ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓய்வுபெற்ற நீதிபதி மற்றும் காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட "இவ நம்மவ வேதிகே" என்ற அமைப்பு உருவாக்கப்படும். இது அத்தகைய ஜோடிகளுக்கு ஆலோசனைகளையும் பாதுகாப்பையும் வழங்கும்.

அரசின் கடமை - புதிய சட்டம் சொல்வது என்ன?

தற்போதைய பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டங்கள், 'சாதி கௌரவம்' என்ற பெயரில் நடக்கும் வன்கொடுமைகளை முழுமையாகக் தடுக்கவில்லை என்று மசோதா குறிப்பிடுகிறது. உயிரோடு இருக்கும் மகளுக்குத் திதி கொடுப்பது, சொத்துரிமை மறுப்பு போன்ற உளவியல் ரீதியான சித்திரவதைகளையும் இச்சட்டம் கட்டுப்படுத்தும்.

"வயது வந்த இருவர் திருமணம் செய்ய முடிவெடுத்தால், அதற்குப் பெற்றோர் அல்லது சாதி அமைப்புகளின் அனுமதி தேவையில்லை" என்று இந்த மசோதா திட்டவட்டமாகக் கூறுகிறது.

இதன் மூலம் பசவண்ணர் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் கனவான சாதியற்ற சமூகத்தை நோக்கிய ஒரு முக்கிய அடியை கர்நாடக அரசு எடுத்து வைத்துள்ளது. இந்த நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+