மோடி கர்நாடகாவில் இருக்கும் போதே.. ஆடிப்போன பாஜகவின் அஸ்திவாரம்.. லிங்காயத்துகள் காங்கிரசுக்கு ஆதரவு
பெங்களூர்: கர்நாடகாவில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அங்கே வீர சைவ லிங்காயத்துகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து உள்ளனர்.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் கூட இல்லாத நிலையில் அங்கே பாஜகவிற்கு இது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பாஜகவில் வரிசையாக லிங்காயத்து தலைவர்கள் ஓரம்கட்டப்பட்டு வருகின்றனர். அங்கே தேர்தலை தீர்மானிக்கும் லிங்காயத்து பிரிவை ஏற்கனவே பகைத்து பாடம் கற்ற வரலாறு உண்டு.

பாஜக கடந்த சட்டசபை தேர்தலுக்கும் முந்தைய தேர்தலான 2013 தேர்தலில் லிங்காயத்து ஜாதியினரை பகைத்து அங்கே பெரிய பாடம் கற்றது.
2013 தேர்தலில் எடியூரப்பாவை ஒதுக்கி.. எடியூரப்பா தனி கட்சியே தொடங்கி லிங்காயத்து வலிமையை பாஜகவிற்கு காட்டினார். அதனால் அங்கே பாஜக ஆட்சியை இழந்து 2013ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.
இந்த முறை மீண்டும் லிங்காயத்து தலைவர்களை பாஜக ஒதுக்கி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் எடியூரப்பாவின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டு தேர்தல் பணிகளோடு அவர் ஓரம்கப்பட்டு உள்ளார்.
அதேபோல் லிங்காயத்து பிரிவை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் லக்ஷ்மன் சாவடி இதேபோல் ஓரம்கட்டப்பட்டு தற்போது காங்கிரசில் இணைந்து உள்ளார். அவரும் லிங்காயத்து தலைவர்தான்.
இப்போது இன்னொரு லிங்காயத்து தலைவரான ஷெட்டர் காங்கிரசுக்கு சென்றுள்ளார்.
கர்நாடகாவில் லிங்காயத்துகள் மிகவும் வலிமையான ஜாதி பிரிவினர். லிங்காயத்துகள் பெருமளவில் வட கர்நாடகாவில்தான் உள்ளனர். அங்கே இருக்கும் பெலகாவி, தார்வாட் மற்றும் கடக் மாவட்டங்களில் அவர்கள் அதிகம் உள்ளனர்.
அதேபோல் அவர்கள் பாகல்கோட், பிஜாப்பூர், குல்பர்கா, பிதார் மற்றும் ராய்ச்சூர் ஆகிய இடங்களிலும் கணிசமான அளவில் உள்ளனர். மேலும் தெற்கு கர்நாடகாவிலும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் முடிவுகளை தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர். குறிப்பாக பெங்களூர், மைசூர் மற்றும் மாண்டியாவில் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.
லிங்காயத்துகள் பொதுவாக வாக்குகளிக்கும் விதம்தான் அங்கே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. இந்த நிலையில்தான் அங்கே வீர சைவ லிங்காயத்துகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து உள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன் காங்கிரஸ் தலைவரும், முக்கிய லிங்காயத் தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர், ஹுப்பாலியில் உள்ள லிங்காயத்து வீர சைவ அமைப்பின் தலைவர்களை சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கோரினார்.
இந்த நிலையில்தான் தற்போது வீர சைவ லிங்காயத்துகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து உள்ளனர். லிங்காயத் வாக்குகள் பொதுவாக கர்நாடக மாநிலத்தில் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருந்து வருகிறது.
அவர்கள் பொதுவாக பாஜகவிற்கு வாக்களித்து வந்த நிலையில்தான் தற்போது காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகள் பாஜகவின் கோட்டையாக இருந்தன. இப்போது அவை காங்கிரஸ் பக்கம் செல்லும் வாய்ப்புகள் உள்ளன.
அங்கே லிங்காயத்துகள் ஆதரவு இன்றி வெற்றிபெறுவதற்கான சோதனை முயற்சிகளை பாஜக மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே தேர்தலில் பாஜகவிற்கு எதிரான சூழ்நிலை நிலவும் நிலையில், தற்போது அங்கேயே லிங்காயத்து ஆதரவும் போய் இருப்பது பாஜகவிற்கு பெரிய பின்னடைவை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சரியாக பிரதமர் மோடி அங்கே பிரச்சாரம் செய்து வரும் நிலையில்தான் பாஜகவிற்கு இந்த அதிர்ச்சி செய்தி சென்றுள்ளது.

கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. அங்கு மே 10ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.
தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
அங்கே வேட்பாளர்களை அறிவித்து உள்ள காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை செய்து வருகிறது.
இதுவரை வெளியான கருத்து கணிப்புகளில் பாஜக மிகப்பெரிய அளவில் தோல்வி அடையும் என்று கூறப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications