தப்பிக்குமா பெங்களூர்? கர்நாடகாவில் 5 நாட்கள் கொட்டப்போகும் கனமழை.. வானிலை மையம் வார்னிங்
பெங்களூர்: கர்நாடகாவில் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பெங்களூர் வானிலை நிலவரம் குறித்து முக்கிய அப்டேட்டும் வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் சில இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லையோர மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஆனால் பெங்களூரில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. அவ்வப்போது லேசாக சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு பெங்களூர் புறநகர் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதற்கிடைய தான் கர்நாடகாவில் அடுத்த 5 நாட்கள் கனமழை பெய்ய உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆகஸ்ட் 26ம் தேதி முதல் கடலோர கர்நாடகா, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடகர்நாடகா மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளது. ஆகஸ்ட் 26ம் தேதி தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
அதன்படி உத்தர கன்னடா, உடுப்பி, தட்சின கன்னடா, ஹாசன், சிவமொக்கா, குடகு, சிக்கமகளூர், பெலகாவி மற்றும் விஜயாப்புரா மாவட்டங்களில் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை (எல்லோ அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பீதர், கலபுரகி மற்றும் யாதகிரியில் மணிக்கு 40-50 கிலோமீட்டர் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் கொப்பல் ராய்ச்சூர், ஹாவேரி மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தார்வார், கதக், தாவணகெரே, ஹாவேரி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. விஜயநகர், துமகூரு, ராமநகர், மைசூர், மண்டியா, கோலார், சிக்கபள்ளாப்புரா, சாம்ராஜ்நகர், பெங்களூர் புறநகர், பெங்களூர் சிட்டி உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பெங்களூரை எடுத்து கொண்டால் பெரிய அளவில் மழை இருக்காது எனவும், மாலை நேரங்களில் மட்டும் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் நகரில் அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தந்தை - மகனை காப்பாற்றிய பூனை.. வீட்டு மேற்கூரை இடிந்தபோது என்ன நடந்தது? கர்நாடகாவில் நெகிழ்ச்சி -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications