ரூ.20 லட்சம் பணம்.. அவளுக்கு தேவை என் உசுரு, என்னால முடியல..ப்பா.. மனைவியை உதறிய கணவன் எடுத்த முடிவு
பெங்களூரு: நாளுக்கு நாள் மனைவிகள் தொல்லை தாங்காமல், கணவன்மார்கள் நொந்துபோய் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் பெருகி வருவது, பொதுமக்களுக்கு கவலையையும், அதிர்ச்சியையும் தந்து வருகிறது. அந்தவகையில், இப்போதும் ஒரு அப்பாவி இளைஞர், மனைவியின் டார்ச்சர் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம் ஹூப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பீட்டர்.. இவருடைய மனைவி பெயர் பிங்கி. இவர்களுக்கு திருமணம் நடந்து 2 வருடங்கள் ஆகிறது.. இவர்களின் திருமணத்தின்போதே, இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்த தகராறு நாளுக்கு நாள் வளர்ந்து, ஒருகட்டத்தில் எல்லைமீறி விட்டது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சண்டையின் காரணமாக, தம்பதி இருவருமே பிரிந்து விட்டனர். இருவருமே டைவர்ஸ் செய்து கொள்ள முடிவெடுத்து கோர்ட்டை நாடினார்கள்.. இவர்களின் விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவாகரத்து வழக்கில் பிங்கி தனக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வேண்டும் என்று கேட்டுவந்தார்.
மன உளைச்சல்: ஆனால், மனைவியுடன் ஓயாமல் நடந்த தகராறு காரணமாக, தனியார் நிறுவனத்தின் வேலையையே இழந்துவிட்டார் பீட்டர்.. எந்நேரமும் மனைவியால் மன உளைச்சலுக்கு, பதற்றமும், கலக்கமுமாய் காணப்பட்ட பீட்டரை, அவரை வேலையிலிருந்து நீக்கிவிட்டார் அவரது முதலாளி.. மனைவியால் நிம்மதி போய், வேலையும் போய்விட்டதே என்று மன வேதனையில் இருந்துவந்தார் பீட்டர்..
ஆனால், அப்போதும் பிங்கி, பீட்டருக்கு டார்ச்சர் தந்து வந்ததாக தெரிகிறது.. இதனால் வாழ்க்கையே வெறுத்துப்போன பீட்டர், வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக ஒரு உருக்கமான கடிதம் எழுதி விட்டு உயிரை மாய்த்திருக்கிறார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
மன்னிச்சிடுங்க: அந்த கடிதத்தில், "அப்பா, என்னை மன்னிச்சிடுங்க.. என் மனைவி பிங்கி என்னைக் கொல்ல பார்க்கிறாள்.. தினமும் சித்திரவதை செய்கிறாரள்.. அவளுக்கு தேவை என் மரணம்தான்.. என் மனைவியின் சித்திரவதையால் நான் இறந்து கொண்டிருக்கிறேன்.. அண்ணா தயவு செய்து நம்முடைய பெற்றோரை பத்திரமாகப் பார்த்துக்கொள்" என்று கண்ணீருடன் எழுதியிருந்தார்.
பீட்டரின் சகோதரர் ஜோயல் இதை பற்றி சொல்லும்போது,"கடந்த ஞாயிற்றுக்கிழமை நாங்கள் எல்லாரும் சர்ச்சுக்கு போய்விட்டு, மதியம் 12.30 மணிக்கு வீட்டிற்கு வந்தோம்.. அப்போது, பீட்டர் வீட்டில் இறந்த நிலையில் கிடந்தார்.. தன்னுடைய மரண குறிப்பை எழுதி வைத்திருப்பதை அப்போதுதான் நாங்கள் பார்த்தோம்.. எங்கள் சகோதரின் இறப்புக்கு நியாயம் வேண்டும்" என்று கேட்டுள்ளார்.
இதுகுறித்து புகாரின் பேரில் அசோக் நகர் போலீசார் பிங்கியிடம் விசாரணை நடத்தி, தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கைப்பற்றப்பட்ட பிற ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மீண்டும் தற்கொலை: கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி டார்ச்சர் செய்ததால் காதல் திருமணம் செய்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்டார்.. அவரும் இப்படி கடிதம் எழுதி வைத்துவிட்டுதான் தற்கொலை செய்து கொண்டார்.. இப்போது மீண்டும் அதே போன்று சம்பவம் நடந்துள்ளது, கலக்கத்தை தந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications