மது போதையில் விபரீதம்.. நீரில் மூழ்கும் வரை வேடிக்கை பார்த்து வீடியோ எடுத்த நண்பர்கள்.. ஷாக் வீடியோ

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு : கர்நாடகாவின் கலபுராக்கி மாவட்டத்தில் நண்பன் குட்டை நீரில் மூழ்கி உயிரிழப்பதை வேடிக்கை பார்த்த நண்பர்கள் வீடியோ எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். மதுபோதையில் குளித்த நண்பர்களின் இந்த விபரீதத்தை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகாவின் கலபுராக்கி மாவட்டத்தின் மிஞ்குரி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஜாஃபர் அயுப். வயது 22. இவர் தனது நண்பர்களுடன் இணைந்து மது அருந்து இருக்கிறார். பின்னர் அவர்கள் மது போதையில் அருகில் இருந்த குட்டையில் போய் குளித்துள்ளனர்.

அப்போது மது போதையில் இருந்து ஜபார் அயுப் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். அதை வேடிக்கை பார்த்து நண்பர்கள் தொடர்நது வீடியோ எடுத்து வெளியிட்டது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

பெண்கள் துவைக்கிறார்கள்

பெண்கள் துவைக்கிறார்கள்

அந்த வீடியோவில் ஜஃபார் அயுப் உள்பட மூன்று நண்பர்கள் இணைந்து நீரில் குளிக்கிறார்கள். அவர்களின் அருகில் பெண்கள் துணி வைத்துக்கொண்டுள்ளனர்.

விளையாட்டு

விளையாட்டு

அப்போது கரையில் இருந்தபடியே தண்ணீரில் ஒரு நண்பன் விளையாடுகிறார். இன்னொருவரான ஜஃபார் நீரில் தவ்வி குதித்த சிறிது தூரம் செல்கிறார். மற்றொரு நடப்பதை எல்லாம் வீடியோ எடுத்தபடிஇருக்கிறார்.

இறந்து போன ஜாஃபர்

இறந்து போன ஜாஃபர்

இதனிடையே கைக்கு எட்டும் தூரத்தில் ஜஃபார் நீந்த முடியமால் களைத்து நீரில் முழ்குவதுகரையில் அருகிலேயே இருந்த மற்றொரு நண்பன் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார். இன்னொரு நண்பன் அதை கொஞ்சமும் சட்டை செய்யாமல் அவர் மூழ்கும் வரை வீடியோ எடுக்கிறார். கடைசியில் ஜஃபார் நீரில் முழுமையாக மூழ்கி இறந்து போகிறார். இப்படி வீடியோ முடிகிறது.

சவால் விபரீதம்

சவால் விபரீதம்

இந்த சம்பவங்கள் அடங்கிய வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பற்றி கர்நாடகா போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் கூறுகையில் நீச்சல் தெரியாத ஜாஃபரை அவரது நண்பர் நீந்தும் படியும் தண்ணீருக்குள் மூச்சு அடக்க வேண்டும் என்றும் சவால் விட்டு இருக்கிறார்கள். ஆனால் அதை முயன்று பார்த்த ஜாஃபர் சிறிது நேரத்தில் சுயநினைவை இழந்து தண்ணீரில் மூழ்கி இறந்து போயுள்ளார். கைக்கு எட்டும் தூரத்தில் இருந்த நண்பர்கள் இருவரும் அதை வேடிக்கை பார்த்துள்ளனர் என்றார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+