உயிருக்கு உலை வைக்கும் ஊமத்தங்காய் ஃப்ரீ! கர்நாடகாவில் அமேசான், ஸ்விக்கி உணவு லைசன்ஸ் ரத்து?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் அமேசான், ஸ்விக்கி, இன்ஸ்டாமார்ட், பிக்பாஸ்கெட் ஆகிய ஆன்லைன் வர்த்தக செயலிகளின் உரிமங்களை ரத்து செய்யுமாறு அந்த மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை பரிந்துரை செய்துள்ளது. அந்த நிறுவனங்கள் உணவு டெலிவரி செய்யும் உரிமம் ரத்து செய்யப்பட்டால் அவர்கள் உணவு பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கர்நாடகாவில் உள்ள இந்த ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகளில் உயிருக்கு உலை வைக்கக் கூடிய ஊமத்தங்காயை விற்பனை செய்தது தெரியவந்தது. அதிலும் அந்த ஊமத்தங்காய் உண்ணக் கூடிய பொருளாக FSSAI அங்கீகரித்துள்ளதாக கூறி அதன் உரிமம், பதிவு எண்களை பயன்படுத்தி விற்பனை செய்தது தெரியவந்தது.

Karnataka swiggy instamart

அது போல் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் ஆர்டர் செய்த ஒரு வாடிக்கையாளருக்கு இந்த ஊமத்தங்காய் இலவசமாக வழங்கப்பட்டதாம். இதை ஒரு குழந்தை உட்கொண்டதால் உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

ஊமத்தங்காய் மிகவும் விஷத்தன்மை உள்ளது. அதை உட்கொண்டால் கடுமையான உடல்நல பாதிப்புகள் ஏற்படும். இது உயிரிழப்பை கூட ஏற்படுத்தும். எனவே இந்த உணவு டெலிவரி நிறுவனங்கள் உடனடியாக ஊமத்தங்காய் விற்பனையை நிறுத்த வேண்டும் என்றும் அது தொடர்பான விளம்பரங்களை உணவு டெலிவரி செயலிகளில் இருந்து நீக்க வேண்டும், அதன் பெயரை விற்பனை பட்டியலில் இருந்து எடுத்துவிட வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டது.

உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது சுகாதாரத்தை பாதிக்கும் வகையில் நடந்து கொண்ட இந்த செயலிகளின் உணவு உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த ஊமத்தங்காய் விற்பனை குறித்து நெட்டிசன் ஒருவர் வீடியோ எடுத்து போட்ட நிலையில் அது உணவு பாதுகாப்புத் துறை கவனத்திற்கு வந்தது. அப்போது அவர்கள் போய் சோதனை நடத்திய போது அந்த நிறுவனங்களின் குடோந்களில் ஊமத்தங்காய் பதிவு எண்ணுடன் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில் அமேசான் இதுவரை எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிறுவனமோ, ஊமத்தங்காய் விற்பனை குறித்து நிறைய விரிவான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால் நேரம் கேட்டுள்ளது.

பிக்பாஸ்கட் நிறுவனமோ, ஊமத்தங்காய் விற்பனையை நிறுத்திவிட்டோம். மேலும் அந்த பாக்கெட்டுகளில் இது உட்கொள்ள அல்ல என லேபிளில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளன.

எனினும் இந்த நிறுவனங்கள் அளித்த விளக்கங்கள், உணவு பாதுகாப்புத் துறைக்கு திருப்தியாக இல்லையாம். எனவே மேற்கண்ட உணவு டெலிவரி நிறுவனங்களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய உணவு பாதுகாப்புத் துறை பரிந்துரை செய்துள்ளது. இவர்களது உரிமம் ரத்து செய்யப்பட்டால் இவர்களால் எந்த உணவு பொருளையும் விற்பனை செய்ய முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+