பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புயலை கிளப்பிய ஸ்போர்ட்ஸ் பிரா.. பெங்களூர் பார்க்கில் நடந்த சம்பவம்.. சர்ச்சையில் கவிதா ரெட்டி!

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் நடிகை சம்யுக்தா ஹெக்டே பார்க் ஒன்றில் ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து உடற்பயிற்சி செய்த சம்பவமும் அதை காங்கிரஸ் உறுப்பினர் கவிதா ரெட்டி தட்டி கேட்டதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கவிதா ரெட்டி இதனால் தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்த பிரச்சனை அரசியல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

Recommended Video

    சம்யுக்தா ஹெக்டேக்கு நேர்ந்த கொடுமை.. நியாயம் கேட்ட சக நடிகை

    இந்தியாவில் மிகவும் முன்னேறிய நகரங்களில் பெங்களூருக்கு தனி இடம் உண்டு. மேற்கத்திய கலாச்சாரம் மிக எளிதாக பரவிய நகரங்களில் பெங்களூரும் ஒன்று. பல மாநில மக்கள் வசிப்பதும், ஆடை சுதந்திரமும் பெங்களூரின் தனி அடையாளம்.

    பெங்களூரில் இரவு 11 மணிக்கு கூட ஷார்ட்ஸ் அணிந்து பெண்கள் டீ குடிக்க செல்லும் நிகழ்வுகள் மிக சாதாரணமாக நடக்கும். அந்த அளவிற்கு பெங்களூரில் ஆடை சுதந்திரம் இருக்கிறது. ஆனால் அதே பெங்களூரில் பட்ட பகலில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.. தளர்வுக்கு பின்பும்.. சென்னையில் குறையும் கொரோனா.. என்ன நடக்கிறது?இதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.. தளர்வுக்கு பின்பும்.. சென்னையில் குறையும் கொரோனா.. என்ன நடக்கிறது?

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    பெங்களூர் பார்க்குகளில் பெண்கள், ஆண்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் உடல் பயிற்சி செய்வது வழக்கம். தெருவுக்கு தெரு பெங்களூரில் இதற்காகவே பார்க் கட்டப்பட்டுள்ளது. இதற்கு பெண்கள் ஸ்போர்ட்ஸ் உடைகள், இறுக்கமான ஆடைகள் அணிந்து வருவது சாதாரண விஷயமாகிவிட்டது. ஆனால் பிரபல நடிகை சம்யுக்தா ஹெக்டே இப்படி ஸ்போர்ட்ஸ் உடை அணிந்து பார்க்கில் பயிற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சம்யுக்தா ஹெக்டே

    சம்யுக்தா ஹெக்டே

    நடிகை சம்யுக்தா ஹெக்டே பெங்களூரில் இருக்கும் அகரா ஏரி அருகே இருந்த பார்க்கில் உடற் பயிற்சி செய்து உள்ளார். ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து இவர் தனது பெண் நண்பர்களுடன் உடற்பயிற்சி செய்ததாக புகார். இவர் தினமும் இங்கு பயிற்சி செய்வது வழக்கம் என்கிறார்கள். இந்த நிலையில், அந்த பார்க்கிற்கு வந்த கவிதா ரெட்டி, சம்யுக்தா ஹெக்டேவை தட்டி கேட்டு இருக்கிறார்.

    விவரிக்கும் சம்யுக்தா ஹெக்டே

    விவரிக்கும் சம்யுக்தா ஹெக்டே

    அன்று நடந்த சம்பவத்தை விவரித்த சம்யுக்தா ஹெக்டே, நாங்கள் பார்க்கில் பயிற்சி செய்து கொண்டு இருந்தோம். கவிதா ரெட்டியும் இன்னும் சிலரும் எங்களிடம் வந்து சண்டை போட்டார்கள். நாங்கள் அசிங்கமாக உடை அணிந்து இருக்கிறோம் . இங்கிருந்து உடனே வெளியேறுங்கள். அதன்பின் எங்களை ரேப் செய்துவிட்டார்கள் என்று அழுது கொண்டு இருக்காதீர்கள். நீங்கள் செய்வதற்கு பெயர் உடற்பயிற்சி இல்லை.

    மோசமான விஷயம்

    மோசமான விஷயம்

    நீங்கள் செய்வது நமது கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கவிதா ரெட்டி கூறியதாக சம்யுக்தா ஹெக்டே தெரிவித்துள்ளார். அதோடு அங்கு இருந்த ஆண்கள் சிலர், கவிதாவிற்கு ஆதரவாக பேசி உள்ளனர். அதோடு சம்யுக்தா ஹெக்டேவை மோசமாக மிரட்டி உள்ளனர். உங்களின் சினிமா எதிர்காலமே இல்லாமல் போய்விடும் என்று சம்யுக்தா ஹெக்டேவை மிரட்டி உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோவையும் சம்யுக்தா ஹெக்டே வெளியிட்டுள்ளார்.

    போலீஸ் எதுவும் செய்யவில்லை

    போலீஸ் எதுவும் செய்யவில்லை

    அதோடு அங்கு வந்த போலீஸ் எதுவும் செய்யவில்லை. அவர்களும் காங்கிரசின் கவிதா ரெட்டிக்கு ஆதரவாகவே இருந்தனர் என்று சம்யுக்தா ஹெக்டே கூறியுள்ளார். இதனால் தற்போது கவிதா ரெட்டி சர்ச்சையில் சிக்கி உள்ளார். பெண்களின் ஆடை சுதந்திரத்திற்கு எதிராக செயல்படுகிறார். சாலையில் பெண்களை மாரல் போலீசிங் (moral policing) செய்கிறார் என்று கவிதா ரெட்டி மீது இணையத்தில் புகார்கள் குவிந்து வருகிறது.

    அடிக்க வேண்டும் என்று சென்றார்

    அடிக்க வேண்டும் என்று சென்றார்

    அதோடு சம்யுக்தா ஹெக்டேவின் தோழியை கவிதா அடிக்க சென்ற காட்சியும் இதில் பதிவாகி உள்ளது. பெங்களூர் பாஜகவினர் இதை தீவிரமாக ஷேர் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, கோரிக்கை வைத்து வருகிறார்கள். பாஜகவினர் இதை கர்நாடகாவில் அரசியல் பிரச்சனையாக மாற்றியுள்ளனர். இதனால் தற்போது கவிதா ரெட்டி இதில் விளக்கம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கவிதா ரெட்டி விளக்கம்

    கவிதா ரெட்டி விளக்கம்

    இதில் கவிதா ரெட்டி கொடுத்துள்ள விளக்கத்தில், அவர்களின் ஆடை சுதந்திரத்தை நான் கேள்வி கேட்கவில்லை. அவர்கள் சத்தமாக பாடல் போட்டு பயிற்சி எடுக்கிறார்கள் என்று என்னிடம் வாட்ச்மேன் புகார் அளித்தார். அதை தட்டி கேட்க போனேன். அதற்கு என்னிடம் அவர்கள் தவறாக பேசினார்கள். தவறான வார்த்தையை பயன்படுத்தினார்கள். இதனால் பிரச்சனை சண்டையில் முடிந்தது. பொது அமைதியை கெடுக்கும் வகையில் அவர்கள் செயல்பட்டார்கள்.

    விதி மீறல்

    விதி மீறல்

    விதிகளை மீறி செயல்பட்டார்கள். அதனால் சம்யுக்தா ஹெக்டேவிடம் கேள்வி எழுப்பினேன். ஆனால் அவரின் ஆடை குறித்து நான் எதுவும் கேட்கவில்லை. நான் மாரல் போலீசிங் செய்யவில்லை என்று சம்யுக்தா ஹெக்டே கூறியுள்ளார். ஆனால் சம்யுக்தா ஹெக்டே வெளியிட்டு இருக்கும் வீடியோவில், கவிதா ரெட்டி சம்யுக்தா ஹெக்டேவின் ஆடையை விமர்சனம் செய்வது பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kavitha reddy's intervene against Samyukatha Hegde's sports bra issue becomes a political thing in Bangalore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X