பசவராஜ் பொம்மை, பிஒய் ராகவேந்திரா, பிரகலாத் ஜோஷி.. 2-வது கட்ட கர்நாடகா தேர்தலின் விஐபி தொகுதிகள்!
பெங்களூர்: லோக்சபா தேர்தலின் 3-வது கட்டமாக கர்நாடகாவில் 14 தொகுதிகளில் மே 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. கர்நாடகாவில் 2-வது கட்டமாக 14 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. தென் கர்நாடகாவின் ஹாசன், மண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் ஏப்ரல் 26-ல் வாக்குப் பதிவு நடைபெற்றது. மண்டியாவில் 81.67%; கோலா 78.27%; தும்கூர் 78.05% வாக்குகள் பதிவாகின. பெங்களூர் மத்திய தொகுதியில் 54.06% வாக்குகளும் பெங்களூர் தெற்கு தொகுதியில் 53.17% வாக்குகளும் பெங்களூர் வடக்கில் 54.45% வாக்குகளும் பதிவாகின. பெங்களூர் ரூரல் தொகுதியில் 68.30% வாக்குகள் பதிவாகின. கர்நாடகாவில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்ற 14 தொகுதிகளிலுமே காங்கிரஸ் போட்டியிட்டது. 11 தொகுதிகளில் பாஜகவும் 3 தொகுதிகளில் ஜேடிஎஸ் கட்சியும் போட்டியிட்டன.

2-வது கட்டமாக சிக்கொடி, பெல்காம், பாகல்கோட், பிஜப்பூர், குல்பர்கா, ராய்ச்சூர், பிதார், கொப்பல், பெல்லாரி, ஹாவேரி, தார்வாட், உத்தர கன்னடா.
தாவங்கரே, ஷிமோகா ஆகிய 14 தொகுதிகளில் மே 7-ந் தேதி ஓட்டுப் பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் இன்று தேர்தல் பிரசாரம் முடிவடைந்துள்ளது.
ஹாவேரி தொகுதியில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, பாஜக வேட்பாளராக களம் காண்கிறார். அவரை எதிர்த்து காங்கிரஸின் ஆனந்தசுவாமி கட்டதேவரா மடம் போட்டியிடுகிறார். ஷிமோகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா போட்டியிடுகிறார். இத்தொகுதியில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மருமகளும் நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியுமான கீதா ராஜ்குமார் காங்கிரஸ் வேட்பாளராக களம் காண்கிறார். மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, தார்வாட் தொகுதியில் போட்டியிடுகிறார். உத்தர கன்னடா தொகுதியில் 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து வென்ற பாஜகவின் அனந்தகுமார் ஹெக்டேவுக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஷிமோகா தொகுதியில் பாஜகவின் அதிருப்தி வேட்பாளர் ஈஸ்வரப்பா களம் காண்கிறார். இதனால் கர்நாடகாவில் நடைபெறும் 2-வது கட்ட லோக்சபா தேர்தல் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications