Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐயயோ.. என்னடா இது பெங்களூருக்கு வந்த சோதனை.. வீட்டு வாடகை விர்ர்! "கிட்னி சேல்ஸ்"

பெங்களூரில் இந்த கஷ்டங்களை அனுபவிக்கும் ஒருவர் தனது வேதனையை போஸ்டர் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: வீட்டுக்கு அட்வான்ஸ் பணம் கொடுக்க தனது இடதுபுற கிட்னியை விற்கப் போவதாக ஒரு நபர் பெங்களூரில் அடித்த போஸ்டர்தான் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்தியாவில் இன்றைய காலக்கட்டத்தில் வேலை கூட எளிதில் கிடைத்துவிடும் போல, வாடகைக்கு ஒரு வீடு கிடைப்பது பெரும் சிரமமான காரியமாகவே இருக்கிறது. வாடகை வீடு தேடி அலைபவர்களுக்குதான் அந்தக் கஷ்டம் தெரியும்.

குறிப்பாக, சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் கேட்கவே வேண்டாம்.. சுமார் 2 -3 மாதங்கள் அலைந்து திரிந்தால்தான் நமது பட்ஜெட்டுக்கு ஏற்ற வாடகை வீட்டை பிடிக்க முடியும். அதுவும் இப்போது வாடகை எல்லாம் எக்குத்தப்பாக எகிறி வருகிறது.

மிரட்டும் அட்வான்ஸ்

மிரட்டும் அட்வான்ஸ்

உதாரணமாக, சென்னையில் 15 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல், ஓரளவுக்கு வசதியான வாடகை வீட்டை பிடிப்பது என்பது குதிரைக் கொம்பு தான். இதுவே பெங்களூரில் நிச்சயம் 25 ஆயிரம் ரூபாயை வைத்தே தீர வேண்டும். சரி.. ஒரு வழியாக அலைந்து திரிந்து வாடகை வீட்டை பிடித்துவிட்டோம் என்று நிம்மதி அடைவதற்குள், வீட்டு ஓனர்கள் கேட்கும் அட்வான்ஸ் தொகையை கேட்டால் தலையே சுற்றிவிடும். 5 மாத வாடகையை அட்வான்ஸாக கேட்ட காலமெல்லாம் மலையேறி போய், இப்போது 10 அல்லது 12 மாத அட்வான்ஸ் கேட்கப்படுகிறது.

அதிரடி போஸ்டர்

அதிரடி போஸ்டர்

இந்த அட்வான்ஸ் தொகையை கொடுக்க வேண்டுமானால், நிச்சயம் வட்டிக்கு கடன் வாங்கியோ அல்லது நகைகளை அடகு வைத்தோ தான் கொடுக்க முடியும். இந்நிலையில், பெங்களூரில் இந்த கஷ்டங்களை அனுபவிக்கும் ஒருவர் தனது வேதனையை போஸ்டர் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார். சுமார் ஒரு வாரத்துக்கு முன்பு பெங்களூரின் பல முக்கிய பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

கிட்னி விற்பனைக்கு..

கிட்னி விற்பனைக்கு..

ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட அந்த போஸ்டரில், இடதுபுற கிட்னி விற்பனைக்கு என எழுதப்பட்டிருந்தது. அதற்கு கீழே, வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் தொகை கொடுப்பதற்காக, கிட்னியை விற்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு கீழே, "கிண்டலுக்காக இதை கூறினேன். இந்திரா நகரில் வீடு தேவைப்படுகிறது. எனது ப்ரொஃபைலை காண QR Code-ஐ ஸ்கேன் செய்யுங்கள்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

 கலகல கமெண்ட்டுகள்

கலகல கமெண்ட்டுகள்

கிண்டலுக்காக ஒட்டப்பட்டிருந்தாலும், இன்றைய பெருநகரங்களில் வாடகை வீடு தேடுபவர்கள் அனுபவிக்கும் கொடுமையை முகத்தில் அறைந்ததை போல சொல்கிறது இந்த போஸ்டர். இந்நிலையில், இந்த போஸ்டர்களின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாவதுடன், நெட்டிசன்களின் கமெண்டுகளும் களைக்கட்டி வருகின்றன. ஒருவர் தனது கமெண்ட்டில், அட்வான்ஸ் கொடுக்க இடது கிட்னியை விற்றுவிட்டீர்கள். வீட்டு புரோக்கருக்கு பணம் கொடுக்க வலது கிட்னியை எப்போது விற்க போகிறீர்கள் ப்ரோ?" எனக் கேட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+