"என் மனைவியை விட்டுவிடுங்கள்.." அவர் கர்ப்பிணி.. உருக்கமாக கேட்ட ஆர்சிபி வீரர்.. அதிர்ச்சி சம்பவம்!
பெங்களூர்: பெங்களூர் அணியின் தோல்வியை தொடர்ந்து அந்த அணியில் ஆடும் ஆல் ரவுண்டர் டேன் கிறிஸ்டியன் உருக்கமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான ப்ளே ஆப் சுற்று போட்டியில் பெங்களூர் தோல்வி அடைந்து வெளியேறியது. முதலில் ஆடிய பெங்களூர் அணி 138-7 ரன்கள் எடுத்தது.
பெங்களூர் அணியின் பேட்டிங் சொதப்பியதால் அந்த அணி மிக குறைவான ரன்களே எடுத்தது. அதன்பின் ஆடிய கொல்கத்தா 19.4 ஓவரில் எளிதாக 139 ரன்கள் எடுத்து வென்றது.

மோசமான ஆட்டம்
நேற்று இந்த போட்டியில் பெங்களூர் வீரர் டேன் கிறிஸ்டியன் மிக மோசமாக ஆடினார். இந்த சீசன் முழுக்கவே அவர் சரியாக ஆடவில்லை. இரண்டாம் பாதி சீசன் முழுக்கவே ஒவ்வொரு போட்டியிலும் அதிகபட்சம் ஒரு ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல் பவுலிங்கிலும் பெரிதாக டேன் கிறிஸ்டியன் எதுவுமே செய்யவில்லை. அவரின் ஆட்டம் ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே இருந்தது.

தோல்வி
நேற்றும் கூட முக்கியமான கட்டத்தில் கொல்கத்தாவிற்கு எதிராக டேன் கிறிஸ்டியன் 8 பந்தில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். முக்கியமான நேரத்தில் இவர் டெஸ்ட் பேட்டிங் செய்தார். பெங்களூர் தோல்வி அடைய இவர் முக்கியமான காரணமாக இருந்தார். ஏனென்றால் பவுலிங்கிலும் டேன் கிறிஸ்டியன்தான் ஆட்டத்தை மாற்றினார்.
Recommended Video

நரேன்
சுனில் நரேன் பேட்டிங் இறங்கிய போது டேன் கிறிஸ்டியன் வீசிய ஓவரில் வரிசையாக மூன்று சிக்ஸ் அடித்தார். அந்த ஓவரில்தான் கொல்கத்தா அணி 75 ரன்களில் இருந்து எளிதாக 100 ரன்களை கடந்தது. அந்த ஓவரில்தான் ஆட்டமே மாறியது. இதனால் தற்போது பெங்களூரின் தோல்வியை தொடர்ந்து டேன் கிறிஸ்டியனை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

ட்வீட்டர்
ட்வீட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் டேன் கிறிஸ்டியனை மிக மோசமாக ஆர்சிபி ரசிகர்கள் திட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அவரின் இன்ஸ்டா கமெண்ட் முழுக்க ரசிகர்கள் மிக மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளனர். அதோடு அவரின் மனைவி ஜோர்ஜியா டுன் இன்ஸ்ட்டா பக்கத்திலும் பலர் கெட்ட வார்த்தைகளால் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

கெட்ட வார்த்தை
அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனால் அது தொடர்பான புகைப்படங்களை சந்தோசமாக வெளியிட்டு வருகிறார். ஆனால் அதிலும் கூட சென்று டேன் கிறிஸ்டியன் மனைவியை பாலியல் ரீதியாக விமர்சனம் செய்து, கெட்ட வார்த்தைகளால் சில மோசமான ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். இதனால் டேன் கிறிஸ்டியன் தற்போது வேறு வழியின்றி இன்ஸ்டாவில் அதை ஸ்டோரியாக வைத்து ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறார்.

ஸ்டோரி
என் மனைவியின் இன்ஸ்ட்டா போஸ்டில் இருக்கும் கமெண்ட்களை பாருங்கள். நான் இன்று சரியாக ஆடவில்லை. ஆனால் அதுதான் விளையாட்டு. அப்படித்தான் இருக்கும். என் மனைவியை இதற்காக நீங்கள் விமர்சிக்க வேண்டாம். அவரை விட்டுவிடுங்கள், என்று உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். நான் சரியாக ஆடவில்லை என்பதால் என் மனைவியை மோசமாக விமர்சிக்க வேண்டாம் என்று டேன் கிறிஸ்டியன் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். அவரின் இந்த போஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications