ராணுவ வீரர் கொலை வழக்கு.. எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை.. வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை பாயும்!
ராணுவ வீரர் கொலையில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்று காவல்துறை கூறியுள்ளது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ராணுவ வீரர் கொலை சம்பவத்தில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்று காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தெரிவித்துள்ளார். இதில் தாக்கப்பட்டவர்கள், தாக்கியவர்கள் அனைவருமே உறவினர்கள் என்று கூறிய அவர், அரசியல் கண்ணோட்டத்துடன் சமூக வலைதளங்களில் பரப்புரை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி அருகே எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன் மற்றும் அவரது சகோதரர் பிரபு. இவர்கள் இருவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.
கடந்த 8ம் தேதி பிரபு தனது வீட்டின் அருகே உள்ள குடிநீர் தொட்டியின் அருகில் துணிகளை துவைத்துள்ளார். அப்போது அங்கு வந்த நாகரசம்பட்டி பேரூராட்சி வார்டு உறுப்பினர் சின்னசாமி, பிரபுவிடம், இது என்ன துணிகள் துவைக்கு இடமா என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

ராணுவ வீரர் கொலை
இதன் காரணாமாக பிரபு - சின்னசாமி இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போதூ பிரபுவின் அம்மா கண்ணம்மாளும் அங்கு வர, வாக்குவாதம் முற்றியுள்ளது. இந்த நிலையில் பேரூராட்சி வார்டு உறுப்பினர் சின்னசாமி தனது மகன்கள் குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டியன் மற்றும் மேலும் சிலருடன் பிரபாகரன் மற்றும் அவரது சகோதரர் பிரபு மற்றும் அவர்களது நாய் கண்ணம்மாள், தந்தை மீது பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளார்.

9 பேர் கைது
இதில் படுகாயமடைந்த நான்கு பேரும் ஒசூர் தனியார் மருத்துவமானையில் சிகிச்சை பெற்று வந்தானர். இந்த நிலையில் கடந்த 14ம் தேதி மாலை சிகிச்சை பலனின்று ராணுவ வீரர் பிரபு உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், திமுக வார்டு உறுப்பினர் சின்னசாமி உட்பட 9 பேரை கைது செய்துள்ளனர்.

காவல் கண்காணிப்பாளர் விளக்கம்
இதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட காட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ராணுவ வீரரை திமுகவினர் திட்டமிட்டு கொலை செய்ததாக சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் செய்தியாளார்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார். அதில், ராணுவ வீரர் கொலை சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை.

எச்சரிக்கை
இதில் தாக்குதல் நடத்தியவர்கள், காயம் அடைந்தவர்கள், உயிரிழந்த ராணுவ வீரர் அனைவரும் நெருங்கிய உறவினர்கள் தான். சாதாரணமாக தொடங்கிய சண்மை, கைகலாப்பாக மாறி கொலை வரை சென்றுள்ளது. இதனை சில அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் திட்டமிட்ட கொலை என்று அரசியல் கண்ணோட்டத்தோடு சமூக வலைதளங்களில் பரப்புரை செய்து வருகின்றானர். அப்படி பாரப்புரை செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
தூய சக்தி என்றால் 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்கணும்.. விஜய்க்கு அன்புமணி வைத்த வேண்டுகோள் -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
தவெகவுக்கு தாவிய.. அதிமுக எம்எல்ஏக்களின் செயல் அர்த்தமற்றது! - கொந்தளித்த விசிகவின் பாலாஜி -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
ஸ்டாலின் விரக்தியில் ஏதேதோ பேசுகிறார்.. உண்மை அவருக்கு தெரியாமாலேயே போயிருச்சு! அன்புமணி அட்டாக்! -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம்












Click it and Unblock the Notifications