இங்க பாருங்க.. கண்டக்டர் கையை எங்க வெச்சிருக்காரு.. பெண் பயணியிடம் சில்மிஷம்.. வைரலாகும் வீடியோ
பெண் பயணியிடம் பஸ் கண்டக்டர் சில்மிஷம் செய்யும் வீடியோ வைரலாகிறது
Recommended Video
பெங்களூரு: இங்க பாருங்க.. கண்டக்டர் கையை எங்கே வெச்சிருக்காரு.. என்ன செய்யறார்...ன்னு.. பஸ்ஸில் வந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.. இந்த வீடியோதான் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
பெங்களூருவில் இருந்து மங்களூரு மாவட்டம் புத்தூரை நோக்கி கேஎஸ்ஆர்டிசி பஸ் ஒன்று சென்றுள்ளது.. அந்த பஸ்சில் இளம் பெண் ஒருவர் ஏறினார்.. பெண்கள் சீட்டில் வந்து உட்கார்ந்துகொண்டார்.
அப்போது, அந்த பஸ் கண்டக்டர் சிசுஹரி சாலூர் என்பவர் எல்லோருக்கும் டிக்கெட் தந்து கொண்டிருக்கும்போதே இந்த பெண்ணையும் கவனித்தார்.. பிறகு இளம்பெண்ணின் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டார்.. கொஞ்ச நேரம் அமைதியா இருந்தார்..அதற்கு பிறகு தன் வேலையை காட்ட ஆம்பித்தார்.

சில்மிஷம்
தன்னுடைய 2 கைகளையும் இறுக்கி கட்டிக் கொண்டார்.. பிறகு பக்கவாட்டில் பெண்ணிடம் தன் கையை நுழைத்து ரகசியமாக சில்மிஷம் செய்ய ஆரம்பித்தார்.. திடுக்கிட்ட அந்த பெண் இதை தடுக்க முயற்சித்தார்.. ஆனாலும் கண்டக்டர் விடவில்லை.. அந்த பெண் கண்டக்டரின் கையில் இருந்து நழுவி நழுவி தள்ளி உட்கார்ந்தார்.. உடனே கண்டக்டர் அந்த பெண்ணின் பெண்ணின் கையை தட்டிவிட்டு, திரும்பவும் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

கண்டக்டர்
பஸ்ஸில் இருந்து மற்றவர்கள் பார்த்தால், கண்டக்டர் கையை கட்டி சும்மா உட்கார்ந்திருப்பதுபோலதான் தெரியும்.. ஆனால் சைட்-வாக்கில் வேலையை காட்டி கொண்டிருந்தார்.. ஒரு கட்டத்தில் தாங்கி கொள்ள முடியாத அந்த பெண், கண்டக்டரின் அராஜகத்தை அவருக்கு தெரியாமல் நைஸாக தன் செல்போனில் வீடியோ எடுக்க ஆரம்பித்துவிட்டார்.

சத்தம் போட்டார்
பஸ் கொஞ்ச தூரம் போனது.. திடீரென பஸ்ஸை நிறுத்துங்க.. நிறுத்துங்க என்று அந்த பெண் கத்தினார்.. பஸ் நின்றதும் பயணிகள் எல்லோரும் திடுக்கிட்டு அந்த பெண்ணை திரும்பி பார்த்தனர்... இப்போது கண்டக்டரை பிடித்து வெளுக்க ஆரம்பித்தார் அந்த பெண்... உடனே கண்டக்டர், "நான் எதுவுமே செய்யல, சும்மாதான் கையை கட்டிக்கிட்டுஉட்கார்ந்திருந்தேன்" என்று சத்தம் போட்டு விவாதம் செய்தார்.

ஃபேஸ்புக்
கடைசியாக அந்த பெண் வீடியோவை எடுத்து காட்டினார்... கண்டக்டர் அதை பார்த்ததும் ஆடிப்போய்விட்டார்... பஸ்ஸில் இருந்த எல்லாருமே அந்த செல்போன் சில்மிஷ வீடியோவை பார்த்தனர்.. அப்போதும் இந்த பெண் விடவில்லையே.. தன்னுடைய ஃபேஸ்புக்கில் போட்டுவிட்டார்.. இதுதான் பெங்களூருவில் பற்றிக் கொண்டு எரிந்தது.. வீடியோ படுவைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கைது
இதன்பிறகு அந்த பெண், கேஎஸ்ஆர்டிசி நிர்வாகம் மற்றும் போலீசாரிடம் கண்டக்டர் சிசுஹரி சாலூர்மீது புகாரும் தந்தார்.. இந்தபுகாரை கண்ட கேஎஸ்ஆர்டிசி நிர்வாக அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர்.. உடனடியாக தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கிறோம் என்று அந்த பெண்ணுக்கு வாக்குறுதி தந்ததுடன், அதன்படியே கண்டக்டரையும் போலீசார் கைது செய்தனர். கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
22 வயதில் 6வது கர்ப்பம்.. கணவரின் விபரீத ஆசையால் உறைந்த டாக்டர்.. 4 கோடி பேர் பார்த்த வைரல் வீடியோ -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications