பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆட்சியை தக்க வைக்க "போராட்டம்".. எல்லாத்துக்கும் மன உடையும் குமாரசாமியின் மனதளராத முயற்சி!

Google Oneindia Tamil News

Recommended Video

    Karnataka Political Crisis | இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவேயும் தப்புகிறதா குமாரசாமி அரசு?- வீடியோ

    பெங்களூர்: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 2 நாட்கள் காலஅவகாசம் கொடுக்க வேண்டும் என முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

    கர்நாடக சட்டசபையில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை குமாரசாமி அரசு கொண்டு வந்தது.

    ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பு கொறடாவுக்கு பொருந்தாது என காங்கிரஸ் தரப்பு தெரிவித்தது. மேலும் சட்டசபை விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட கூடாது என்று இருக்கும் நிலையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து நீதிமன்றமே விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என காங்கிரஸ் தரப்பு தெரிவித்தது.

    2 நாள் டைம் கேட்கும் குமாரசாமி.. இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விரும்பும் சபாநாயகர்.. பரபரப்பு 2 நாள் டைம் கேட்கும் குமாரசாமி.. இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விரும்பும் சபாநாயகர்.. பரபரப்பு

    ஒத்திவைப்பு

    ஒத்திவைப்பு

    இதையடுத்து மாநில ஆளுநரிடம் பாஜக முறையிட்டது. அப்போது உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு உத்தரவிடப்பட்டது. ஆனால் இரு நாட்களாகியும் நடத்தப்படவில்லை. இதையடுத்து சட்டசபை திங்கள்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.

    மனுதாக்கல்

    மனுதாக்கல்

    இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடுமாறு 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    நம்பிக்கை வாக்கெடுப்பு

    நம்பிக்கை வாக்கெடுப்பு

    ஆனால் நீதிபதியோ, கர்நாடகா- உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட முடியாது என கூறி கோரிக்கையை நிராகரித்துவிட்டார். இந்த நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் நாளை ஆஜராக சம்மன் அனுப்பிய சபாநாயகர் ரமேஷ்குமார், இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.

    கோரிக்கை

    கோரிக்கை

    இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தை நடத்த வேண்டியுள்ளதால் கால அவகாசம் தேவை என குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். அதாவது நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடர்ந்து நடத்த வேண்டியுள்ளதால் புதன்கிழமை வரை நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்தி வைக்க வேண்டும் என கோரியுள்ளார்.

    கணக்கு

    கணக்கு

    இன்னும் இரு தினங்களுக்குள் எப்படியும் அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானம் செய்துவிடலாம் என குமாரசாமி கணக்கு போட்டுள்ளார். ஆனால் இது எந்தளவுக்கு கைகூடும் என்பது போக போகத் தான் தெரியும்.

    English summary
    Karnataka CM Kumarasamy asks Speaker Ramesh Kumar 2 days time for conducting trust vote in assembly
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X