என்னது கர்நாடகா காங்கிரஸ் அரசு கவிழ்ப்பு? பாஜகவின் ஆபரேஷன் லோட்டஸ் ஆரம்பம்?தாங்குமா 'சித்து' ஆட்சி?
பெங்களூர்: கர்நாடகா அரசியலில் புதிய பரபரப்பாக முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சிகள் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியைப் பெற்று பாஜகவிடம் இருந்து ஆட்சியை பறித்தது. அத்தேர்தலில் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் பெரும் தோல்வியை சந்தித்தன. தற்போது முழு மெஜாரிட்டியுடன் முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது.

காவிரி பிரச்சனை: காவிரி நதிநீர் பிரச்சனையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்க முடியாது என அறிவித்த முதல்வர் சித்தராமையா, இதனால் கர்நாடகா காங்கிரஸ் அரசு டிஸ்மிஸ் செய்யப்படுமா? என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். காவிரி நதிநீரை திறக்க மறுப்பதால் கர்நாடகா அணைகளை மத்திய அரசு கையகப்படுத்துமா? என்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினார் சித்தராமையா. காவிரி பிரச்சனைக்காக ஆட்சி கவிழ்ப்பு குறித்து அவர் பேசிய பேச்சுகள் இப்போது வேறுவகையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
6 மாதத்தில் ஆட்சி கவிழும்: கர்நாடகா முன்னாள் முதல்வரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கர்நாடகா காங்கிரஸ் அரசு 6 மாதங்களில் கவிழ்ந்துவிடும். என் தலைமையிலான முந்தைய காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் அரசு கவிழ்க்கப்பட்டதன் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். என்னுடைய அரசு எப்படி கவிழ்க்கப்பட்டதோ அப்படியே தற்போது சித்தராமையா தலைமையிலான ஆட்சியும் கவிழ்க்கப்படும். சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நீடிக்கப் போவது இல்லை என்றார்.
ஆபரேஷன் லோட்டஸ் நடக்காது: குமாரசாமியின் இந்த பேட்டிக்கு பெங்களூரில் அமைச்சர் செலுவராயசாமி பதிலளித்தார். பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த செலுவராயசாமி, காங்கிரஸ் அரசு கவிழும் என்கிறார் குமாரசாமி. அவருடன் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் போகமாட்டார்கள். முந்தைய காலத்தில் பாஜகவுக்கு 100க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் இருந்தனர். இதனால் ஆபரேஷன் லோட்டஸ் சக்ஸஸ் ஆனது. ஆனால் பாஜகவுக்கே இப்போது போதுமான எம்.எல்.ஏக்கள் இல்லை. எங்களுக்கு பெரும்பான்மைக்கு அதிகமாக 135 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது. அதனால் குமாரசாமியின் கனவு பலிக்காது. அப்படி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை நடக்கவும் விடமாட்டோம் என்றார். இன்னும் சொல்லப்போனால், பாஜகவுடனான கூட்டணியால் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியே காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.. முதலில் அவர் தமது கட்சி எம்.எல்.ஏக்களைத் தக்க வைக்கட்டும் என்றார்.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications