லிவிங் டூகெதர்! பெங்களூருவில் காதலன் தூக்கில் தொங்கியதுமே, அந்த துணியை எடுத்து காதலி அதிர்ச்சி செயல்
பெங்களூரு: புரிதல் இல்லாத ஒரே காரணத்துக்காக, அநியாயமாக உயிர்கள் பலியாகி கொண்டிருக்கின்றன.. குறிப்பாக இளம் தம்பதிகளிடம் இப்படியான புரிதல் இல்லாததால் விவாகரத்துகளும் அதிகரித்து வருகின்றன. இந்த புரிதல் குறைபாடுகள் காதலர்களிடம் அதிகரித்து கொண்டிருக்கின்றன.. கர்நாடகா மாநிலத்தில் நடந்த துயரம் ஒன்று, பொதுமக்களிடையே வருத்தத்தையும், கலக்கத்தையும் தந்து வருகிறது.
ஆனேக்கல் தாலுகா ஜிகினி பகுதியில் வசித்து வருபவர் ராகேஷ் பாத்ரா.. இவருக்கு 23 வயதாகிறது.. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராகேஷ், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார்.

இதே நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருபவர் சீமா நாயக்.. இந்த பெண்ணுக்கு 21 வயதாகிறது.. இவரும் ஒடிசாவை சேர்ந்தவர்தான்.. ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ராகேஷூம், சீமாவும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி நட்பானார்கள். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
வாடகை வீடு
இதையடுத்து, ஜிகினி அருகிலுள்ள கல்லுபாலு என்ற கிராமத்தில், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து 2 பேருமே தங்கியிருந்தனர்.. திருமணம் செய்யாமலேயே லிவிங் டூ கெதர் பாணியில் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
எனினும் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு முளைக்க துவங்கி, அடிக்கடி தகராறுகளும், சண்டைகளும் வெடித்தன.. இந்நிலையில், நேற்று முன்தினம் ராகேஷின் வீடு திறக்கப்படவேயில்லை..
அக்கம்பக்கத்தினர் சந்தேகம்
தீபாவளி நேரத்தில் ராகேஷ், சீமா இருவரையுமே ஒருநாள் முழுக்க காணவில்லையே? என்று அக்கம்பக்கத்தில் சந்தேகம் எழுந்துள்ளது.. இதனால் நேற்று காலையில் ராகேஷூக்கு போன் செய்துள்ளனர்.. ரிங் போயிருக்கிறது, ஆனால், ராகேஷ் போன் எடுக்கவில்லையாம்.
இதனால் மேலும் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், அவர்கள் வீட்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர்.. அப்போதுதான் சீமா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதையும், அருகிலேயே ராகேஷூம் பிணமாக கிடப்பதையும் பார்த்து அலறினார்கள்..
இதுபற்றி உடனடியாக ஜிகினி போலீசாருக்கும் தகவல் தந்தார்கள்.. போலீசார் விரைந்து வந்து ராகேஷ், சீமா ஆகியோரின் சடலங்களை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தது.
தூக்கில் தொங்கிய துணி
பிறகு விசாரணையையும் ஆரம்பித்தது. அதாவது கடந்த 19ம் தேதி நள்ளிரவிலேயே சீமா தூங்கிய பின்பு ராகேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். விடிகாலை தூங்கி எழுந்த சீமா, காதலன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்..
உடனே, ராகேஷ் தூக்கில் தொங்கிய துணியை வெட்டி உடலை கீழே இறக்கியிருக்கிறார்.. அப்போதுவரை காதலனுக்கு உயிர் இருக்கும் என்றுதான் நம்பியிருந்துள்ளார்.. ஆனால், காதலன் உயிரிழந்திருப்பது உறுதியாக தெரிந்ததுமே, சீமாவும் தூக்குப்போட்டு இறந்துள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
குடிப்பழக்கம்
10 நாட்களுக்கு முன்னாடிதான், அந்த வாடகை வீட்டுக்கு 2 பேரும் குடிவந்துள்ளார்கள்.. இருவருமே ஒரே கம்பெனியில் தொழிலாளிகளாக வேலை பார்ப்பதால், பண பிரச்சனை இருவருக்குள்ளும் இருந்து வந்துள்ளது..
செக்யூரிட்டியான ராகேஷூக்கு மதுப்பழக்கமும் உள்ளதாக தெரிகிறது. சம்பவத்தன்று இரவும் குடிப்பதற்கு ராகேஷ் பணம் கேட்டதாகவும், இதனால்தான் காதலர்களுக்குள் தகராறு வெடித்து தற்கொலை வரை சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்..
எனினும் இருவரது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் எதுவுமே உறுதியாக சொல்ல முடியும் என்கிறார்கள்.. தற்போது விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications