தேவ கவுடா காலத்தில் தொடங்கிய சினிமாவை மிஞ்சும் 40 ஆண்டுகால அரசியல் பகை.. ஹாசனில் மோதும் 'பேரன்கள்'!
பெங்களூர்: கர்நாடகா லோக்சபா தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக இருப்பது ஹாசன் தொகுதிதான். ஜேடிஎஸ்- காங்கிரஸ் இடையேயான மோதல் என்பதை விட கர்நாடகா அரசியல் சரித்திரத்தில் 40 ஆண்டுகளாக தொடரும் தேவகவுடா vs புட்டசுவாமி கவுடா குடும்பத்தின் மோதல் பேரன்கள் காலத்திலும் நீடிக்கிறது என்பதுதான்.
1980களில் கர்நாடகாவில் ஒக்கலிகா கவுடாக்களில் செல்வாக்கு செலுத்த தொடங்கிய தலைவர்கள் ஜனதா கட்சியின் தேவ கவுடா, காங்கிரஸின் புட்டசுவாமி கவுடா. 1985-ம் ஆண்டு ஹோலேநரசிபுரா சட்டசபை தொகுதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலிதான் தேவ கவுடா, புட்டசுவாமி கவுடா குடும்பத்தின் அரசியல் மோதல் தொடங்கியது.

1985 தேர்தலில் ஜனதா கட்சி வேட்பாளரான தேவகவுடாவை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக புட்டசுவாமி கவுடா களம் கண்டார். தேவகவுடா 41230 வாக்குளையும் புட்டசுவாமி 38063 வாக்குகளையும் பெற்றார். புட்டசுவாமியை தேவகவுடா வீழ்த்தினார்.
ஆனால் 1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேவகவுடாவை புட்டசுவாமி தோற்கடித்தார். 1989-ல் இதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் கண்ட புட்டசுவாமி கவுடா 53297 வாக்குகளையும் தேவகவுடா 45461 வாக்குகளையும் பெற்றார்.
1994-ல் தேவகவுடா vs புட்டசுவாமி குடும்பத்தின் அரசியல் மோதல் அடுத்த தலைமுறைக்கு தொடர்ந்தது. 1994-ம் ஆண்டு தேர்தலில் தேவ கவுடாவின் மூத்த மகன் ரேவண்ணாவும் புட்டசுவாமி கவுடாவும் ஹோலேநரசிபுராவிலேயே மோதினர். ரேவண்ணா 47606 வாக்குகளையும் புட்டசுவாமி கவுடா 47484 வாக்குகளையும் பெற்றனர். புட்டசுவாமியை தேவகவுடா மகன் ரேவண்ணா தோற்கடித்தார்.
1999-ம் ஆண்டு தேர்தலில் புட்டசுவாமி கவுடா ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளர் தொட்டே கவுடா, ரேவண்ணாவை வீழ்த்தினார். அதே ஆண்டு லோக்சபா தேர்தலில் ஹாசன் தொகுதியில் தெவகவுடாவை புட்டசுவாமி கவுடா தோற்கடித்து சரித்திரம் படைத்தார்.
2004-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ரேவண்ணா vs புட்டசுவாமி கவுடா மோதினர். அத்தேர்தலில் ரேவண்ணா 64664 வாக்குகளையும் புட்டசுவாமி கவுடா வெறும் 32070 வாக்குகளையும் பெற்றார். 2006-ம் ஆண்டு புட்டசுவாமி கவுடா காலமானார்.
2008-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேவகவுடா மகன் ரேவண்ணா மீண்டும்
ஹோலேநரசிபுராவில் போட்டியிட்டார். இம்முறை புட்டசுவாமி கவுடாவின் மருமகள் எஸ்ஜி அனுபமா களம் கண்டார். இந்த தேர்தலில் ரேவண்ணா 77448 வாக்குகளையும் புட்டசுவாமி கவுடா மருமகள் அனுபமா 49842 வாக்குகளையும் பெற்றார். 2013-ம் ஆண்டு தேர்தலிலும் இதே மோதல் தொடர்ந்தாலும் ரேவண்ணாவே மீண்டும் வென்றார்.
2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேவகவுடாவின் மகன் ரேவண்ணாவை எதிர்த்து புட்டசுவாமி கவுடாவின் பேரன் ( அனுபமா மகன்) ஸ்ரேயாஸ் பட்டேல் கவுடா களம் கண்டார். ரேவண்ணா 88103 வாக்குகளையும் புட்டசுவாமி கவுடா பேரன் ஸ்ரேயாஸ் பட்டேல் 84951 வாக்குகளையும் பெற்றார். இம்முறையும் ரேவண்ணா சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
சட்டசபை தேர்தல்தான் என்றில்லை.. லோக்சபா தேர்தலிலும் தேவகவுடா vs புட்டசுவாமி கவுடா குடும்ப மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 1999-ம் ஆண்டு ஹாசனில் தேவகவுடாவை தோற்கடித்தார் புட்டண்ணா. தற்போதைய 2024 தேர்தலில் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவும் புட்டசுவாமி கவுடாவின் பேரன் ஸ்ரேயாஸ் பட்டேல் கவுடாவும் மோதுகின்றனர்.
ஹாசன் லோக்சபா தொகுதியில் 5 லட்சம் ஒக்கலிகா கவுடா வாக்குகள் உள்ளன. தலித், பழங்குடிகள் வாக்குகள் 2.5 லட்சம் உள்ளன. லிங்காயத்துகள் 2 லட்சம், குருபாக்கள் 1.5 லட்சம், 1.3 லட்சம் முஸ்லிம் வாக்குகளும் இத்தொகுதியில் உள்ளது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஜேடிஎஸ்- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டு 1,41,324 வாக்குகளைப் பெற்று வென்றார் பிரஜ்வல். இம்முறை ஜேடிஎஸ்-பாஜக வேட்பாளராக பிரஜ்வல் களம் காண, காங்கிரஸ் வேட்பாளராக ஸ்ரேயாஸ் பட்டேல் கவுடா எதிர்கொள்கிறார்.
சினிமாக்களில்தான் பரம்பரை பரம்பரையாக அரசியல் பகை, உள்ளூர் பகை காட்சிகளைக் காண முடியும். கர்நாடகாவில் தேவகவுடா vs புட்டசுவாமி கவுடா குடும்பங்களின் அரசியல் மோதல் 40 ஆண்டுகளாக 3-வது தலைமுறையிலும் தொடருவது சினிமாக்களையே அதிரவைக்கக் கூடியதுதான்!
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications