கர்நாடகாவில் 6 வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா போட்டி!
பெங்களூர்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கர்நாடகாவின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. அதில் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மருமகளும், நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியுமான கீதா சிவராஜ்குமாருக்கு சிவமொக்கா தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

டெல்லி காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் கேசி வேணுகோபால் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு பத்திரிகையாளர்களுக்கு பெயர்களை அறிவித்தார்.
காங்கிரஸின் முதற்கட்ட பட்டியலில் மொத்தம் 39 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ராகுல் காந்தி மீண்டும் கேரளா மாநிலம் வயநாட்டில் களமிறங்கி உள்ளார். இந்த பட்டியலில் கர்நாடகாவில் உள்ள 6 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றன. அதன்படி பிஜாப்பூர் தனி தொகுதியின் வேட்பாளராக எச்ஆர் அல்கூர் (ராஜு) அறிவிக்கப்பட்டுள்ளார். ஹாசன் வேட்பாளராக ஸ்ரேயாஷ் படேல், துமகூரு வேட்பாளராக முத்தேஹனுமே கவுா, மண்டியா வேட்பாளராக வெங்கடராம கவுடாவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் பெங்களூர் புறநகர் தொகுதி வேட்பாளராக மீண்டும் டிகே சுரேஷ் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டிகே சிவக்குமாரின் தம்பி தான் இவர். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் இருந்த வெற்றி பெற்ற ஒரே காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ் தான். இத்தகைய சூழலில் தான் மீண்டும் பெங்களூர் புறநகர் தொகுதியில் டிகே சுரேசுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் மறைந்த கன்னட நடிகரான ராஜ்குமாரின் மருமகள் கீதா சிவராஜ்குமாருக்கு காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளது. சிவமொக்கா தொகுதியில் கீதா சிவராஜ் குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகனும் நடிகருமான சிவராஜ்குமாரின் மனைவி ஆவார். அதோடு கீதா சிவராஜ்குமாரின் தந்தை பங்காரப்பா கர்நாடகாவின் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் என்பதும், கீதாவின் தம்பி மது பங்காரப்பா தற்போதைய கர்நாடகா அரசின் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கிறார்.
கீதாவுக்கு சொந்த மாவட்டம் சிவமொக்கா தான். அவர் திருமணமான பிறகு தான் பெங்களூரில் குடியேறினார். இந்நிலையில் தான் கீதா சிவராஜ் குமாருக்கு சிவமொக்காவில் காங்கிரஸ் வாய்ப்பு வழங்கி உள்ளது. இந்த தொகுதியில் தற்போது முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா எம்பியாக உள்ளார். வரும் தேர்தலிலும் அவர் போட்டியிட உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி கீதா சிவராஜ் குமாரை அங்கு வேட்பாளராக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications