செம ட்விஸ்ட்.. பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ்! பல்டியடித்த தேவகவுடா! கர்நாடகாவில் காங்கிரசுக்கு செக்! ஆஹா
பெங்களூர்: நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவுடன், ஜேடிஎஸ் கட்சி கூட்டணி வைப்பது உறுதியாகி உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வென்று அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாஜக 66 தொகுதிகளிலும், முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மகனுமான முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி 19 தொகுதிகளிலும் மற்றவர்கள் 4 இடங்களிலும் வென்றனர்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் தனித்து ஆட்சியை பிடித்தது. இந்த சட்டசபை தேர்தல் என்பது பாஜக, ஜேடிஎஸ் கட்சிகளுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் பலமாக இருந்த மண்டலங்களில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை வென்று அசத்தியது.
இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு இன்னும் அதிகபட்சம் என்றால் 7 மாதங்கள் மட்டுமே உள்ளது. இதனால் பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் தங்களது கட்சியை பலப்படுத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதோடு காங்கிரஸ் கட்சி தேர்தலின்போது கூறிய 5 முக்கிய வாக்குறுதிகளில் 4 கை நிறைவேற்றிவிட்டது. இது காங்கிரஸ் கட்சிக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாசிட்டிவ்வாக அமையலாம். மேலும் 26 கட்சிகள் இணைந்த தேசிய அளவிலான ‛இந்தியா' கூட்டணியும் காங்கிரஸ் கட்சி மீது மக்கள் பார்வையை திருப்பலாம். இதனால் கர்நாடகாவில் இழந்த செல்வாக்கை மீட்பது என்பது பாஜக, ஜேடிஎஸ் கட்சிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இத்தகைய சூழலில் தான் கர்நாடகாவில் பாஜக-ஜேடிஎஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதுதொடர்பான பேச்சுவார்த்தையும் நடந்து முடிந்துள்ள நிலையில் ஜேடிஎஸ்-பாஜக இடையேயான தொகுதி பங்கீடு மட்டும் இன்னும் உறுதியாகவில்லை என கூறப்படுகிறது.
அதாவது முன்னாள் பிரதமரும், ஜேடிஎஸ் கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடுா சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த வேளையில் அவர்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கான கர்நாடகா கூட்டணி அமைப்பது பற்றி விவாதித்துள்ளனர்.
இந்த வேளையில் தேவகவுடா, பாஜகவுடன் கூட்டணி வைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் மொத்தம் 5 நாடாளுமன்ற தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேவகவுடா கூறியுள்ளார். இதனை கேட்டு கொண்ட ஜேபி நட்டா மற்றும் அமித்ஷா தொகுதி பங்கீடு குறித்து பிரதமர் மோடி இறுதி செய்வார் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேவகவுடா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‛‛கர்நாடகாவில் ஜேடிஎஸ் கட்சி யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டியிட உள்ளது. நாங்கள் தனித்து போட்டியிட்டு ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலும் கூட பரவாயில்லை'' என்றார். இவ்வாறு பேசிய நிலையில் தேவகவுடா தற்போது பாஜக கூட்டணியில் இணைவது உறுதியாகி உள்ளது. இதன்மூலம் அவர் தனது தேர்தல் நிலைப்பாட்டில் இருந்து பல்டியடித்துள்ளதை புரிந்து கொள்ளலாம்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் தலா ஒரு இடங்களில் மட்டுமே வென்றது. மண்டியா தொகுதியில் மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவி சுமலதா வெற்றி பெற்றார். காங்கிரஸ் சார்பில் டிகே சிவக்குமாரின் தம்பி டிகே சுரேஷ் மட்டும் பெங்களூர் புறநகர் தொகுதியில் வென்றார். அதேபோல் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வெல் ரேவண்ணா மட்டும் ஹாசன் தொகுதியில் வென்றார். தற்போது பிரஜ்வெல் ரேவண்ணாவும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications