49 தொகுதிகளில் 5,000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடிய வேட்பாளர்கள்!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் 49 தொகுதிகளில் 5,000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடி இருக்கின்றனர்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் 136 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி மீண்டும் அரியணை ஏறுகிறது. வெறும் 65 இடங்களைப் பெற்ற பாஜக ஆட்சி அதிகாரத்தை இழந்துவிட்டது.

பாஜக பெற்ற இடங்கள் எண்ணிக்கைதான் வெறும் 65. ஆனால் பாஜக தனது 36% வாக்கு வங்கியில் எந்த சேதாரமும் இல்லாமல் அப்படியே தக்க வைத்திருக்கிறது என்கின்றன புள்ளி விவரங்கள்.
இத்தேர்தலில் 49 தொகுதிகளில் வேட்பாளர்கள் 5,000க்கும் குறைவான வாக்குகளில் வென்று வாகை சூடியுள்ளனர்.
வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தொடர்பான ஒரு புள்ளி விவரப் பார்வை:
- 1,000க்கும் குறைவான வாக்கு வித்தியாசங்களில் கட்சிகள் வென்ற இடங்கள்-7/224
காங்கிரஸ் 5
பாஜக 2
- 5,000க்கும் குறைவான வாக்கு வித்தியாசங்களில் கட்சிகள் வென்ற இடங்கள் -42/224
காங்கிரஸ் 23
பாஜக 16
மதச்சார்பற்ற ஜனதா தளம் 3
- 10,000க்கும் குறைவான வாக்கு வித்தியாசங்களில் கட்சிகள் வென்ற இடங்கள் -71/224
காங்கிரஸ் 38
பாஜக 26
மதச்சார்பற்ற ஜனதா தளம் 6
கேஆர்பிபி-1
- 20,000க்கும் குறைவான வாக்கு வித்தியாசங்களில் கட்சிகள் வென்ற இடங்கள்-129/224
காங்கிரஸ் 73
பாஜக 39
மதச்சார்பற்ற ஜனதா தளம் 14
கேஆர்பிபி-1
எஸ்கேபி-1
சுயேட்சை-1
- 50,000க்கும் அதிகமான வாக்கு வித்தியாசங்களில் கட்சிகள் வென்ற இடங்கள்-16 /224
காங்கிரஸ் 12
பாஜக 6
- 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் கட்சிகள் வென்ற இடங்கள்- 1224
காங்கிரஸ்-1 (கனகபுரா டிகே சிவகுமார்)
காங். டிகே சிவகுமார் - 1,43,023
மஜத நாகராஜ்- 20631
பாஜக ஆர். அசோகா-19753
இதே தொகுதியில் 2018-ல் வாக்கு விவரம்:
காங். டிகே சிவகுமார் - 127552
மஜத நாராயண கவுடா- 47643
பாஜக நந்தினி கவுடா-6273
கனகபுரா தொகுதியில் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டிகே சிவகுமாரை எதிர்த்து போட்டியிட்ட 14 வேட்பாளர்களுடமே டெபாசிட்டைப் பறிகொடுத்திருக்கின்றனர். ஆனாலும் கடந்த தேர்தலைவிட இத்தேர்தலில் பாஜக சுமார் 13,000 வாக்குகளைப் பெற்றது. மதச்சார்பற்ற ஜனதா தளம்தான் தமது 27,000 வாக்குகளை இழந்துள்ளது.
2018-ம் ஆண்டு மதச்சார்பற்ற ஜனதா தளம் பெற்ற வாக்குகளில் தற்போது இழந்த 27,000 வாக்குகள் அப்படியே ஒட்டுமொத்தமாக டிகே சிவகுமாருக்கு கொத்தாக கிடைத்திருக்கிறது.
மேலும் இத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் 5% வாக்குகள் அப்படியே காங்கிரஸுக்கு கிடைத்திருக்கிறது. அந்த 5% வாக்குகள்தான் காங்கிரஸின் இத்தகைய பிரம்மாண்ட வெற்றிக்கும் காரணமாக இருந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications