ஆபாசத்தின் உச்சம்! ஓடும் ரயிலில் அலறிய இளம்பெண்.. 47 வயது நபர் செய்த அருவருப்பான செயல்.. அதிரடி கைது
பெங்களூர்: கேரளாவில் இருந்து கோவா நோக்கி சென்ற ரயிலில் பயணம் செய்த 22 வயது இளம்பெண் தூங்கியபோது 47 வயது நபர் செய்த அருவருப்பான செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ரயில்வோ போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
பஸ், வாடகை கார், ரயில்களில் பெண்கள் பயணிக்கும் போது அவர்களுக்கு மர்மநபர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதும், அருவருக்கத்தக செயலில் ஈடுபடுவம் ஆங்காங்கே நடந்து வருகிறது. இத்தகைய குற்றத்தில் ஈடுபடுவோரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தாலும் கூட இன்னும் சில சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.

அந்த வகையில் கேரளாவில் இருந்து கோவா நோக்கி 2 நண்பர்களுடன் சென்ற இளம்பெண்ணுக்கு பூர்ணா எக்ஸ்பிரஸ் ரயிலில் நேர்ந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த திடுக்கிட வைக்கும் சம்பவம் குறித்த விபரம் வருமாறு:
கேரளாவில் இருந்து கோவா நேற்று நேற்று காலையில் பூர்ணா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் 22 வயது இளம்பெண் பயணம் செய்தார். இந்த இளம்பெண் தனது நண்பர்களான 20 வயது மற்றும் 22 வயது நிரம்பிய 2 பேருடன் ரயில் பயணம் மேற்கொண்டார். முதலில் அவர்கள் 3 பேரும் பேசி சிரித்து கொண்டிருந்தனர்.
அதன்பிறகு நேரம் ஆகஆக அவர்கள் அமைதியாகினர். மேலும் இரவு நேரம் வந்ததால் அவர்கள் தூங்க சென்றனர். நேற்று காலை சுமார் 7.30 மணியளவில் அந்த ரயில் கர்நாடகா மாநிலம் கோகர்ணா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போதும் இளம்பெண் தூங்கி கொண்டிருந்தார்.
இந்த வேளையில் அந்த பெண் திடீரென்று கண்விழித்தார். அப்போது அவரது முன்பு நின்ற நபர் சுயஇன்பம் செய்ததை பார்த்து அவர் அலறினார். இதையடுத்து அவரது நண்பர்கள் 2 பேரும் அங்கு வந்து அந்த நபரை பிடித்து வைத்து கொண்டனர். மேலம் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ரயில் மார்காயோ ரயில் நிலையத்தை அடைந்தபோது போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தை சேர்ந்த தத்தாத்ரேய சவான் என்பதும், அவர் கேரளா கண்ணூரில் வேலை செய்து வந்ததும், தற்போது அவரை கோவா சென்றபோது அருவருப்பான செயலில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கேரள லாட்டரியில் ரூ.1 கோடி + 25 லட்சம்.. எர்ணாகுளத்திற்கு அடுத்தடுத்து பரிசு மழை! வின்னர் யார்? -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications