பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் போக்கு காட்டிய மஃப்ளர் ஆசாமி கைது.. தட்டி தூக்கிய என்ஐஏ
பெங்களூர்: மார்ச் 1-ம் தேதி பெங்களூரையே உலுக்கிய ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு தொடர்பாக, சந்தேகத்தின் பேரில், சபீர் என்ற இளைஞரை என்ஐஏ, இன்று கைது செய்துள்ளது. இவர் தனது பையில் வெடிகுண்டை எடுத்து வந்து வெடிக்க வைத்த காரணம் பற்றி தீவிர விசாரணை நடைபெறுகிறது.
பெல்லாரியில் பதுங்கியிருந்த சபீரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில் வெடிகுண்டு வைத்த நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியானது. அதை வைத்து என்ஐஏ அதிகாரிகள் தேடி வந்த நிலையில் சபீர் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். இந்த சபீர் பெல்லாரியில் வசிப்பவர். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் ஹைதராபாத்திற்கு தப்பி செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் சபீரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகுதான் அவர் குண்டு வைத்தாரா, இல்லை வேறு யார் சொல்லியாவது வைத்தாரா, நாச வேலை செய்ய குண்டு வைத்தாரா போன்ற கோணங்களுக்கு விடை கிடைக்கும்.
மேலும் நாசவேலைகளுக்கு குண்டு வெடிப்பு நிகழ்த்த நினைத்திருந்தால் வீரியம் குறைந்த குண்டை வெடிக்கச் செய்தது ஏன் என்பது குறித்தெல்லாம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. குண்டுவெடிப்புக்கு பிறகு 10 நாட்கள் கழித்து ராமேஸ்வரம் கஃபே மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது வழக்கம் போல் தேசிய கீதம் இசைத்துவிட்டு ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.
பின்னணி என்ன?: பெங்களூர் குண்டனஹள்ளி பகுதியில் உள்ளது ராமேஸ்வரம் கஃபே. இங்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 1) மதியம் 1 மணியளவில் பயங்கர வெடி சப்தம் கேட்டது. அங்கிருந்தவர்கள் ஓடி போய் பார்த்த போது உணவகத்தின் முன்பகுதி சேதமடைந்தது. அங்கு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
இதையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் வந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது யாரோ மஃப்ளர் அணிந்த நபர் பில்லிங் கவுன்ட்டரில் ரவா இட்லிக்கு பில் போட்டுவிட்டு ஒரு இடத்தில் வந்து உட்கார்ந்தார். அப்போது சுமார் காலை 11.44 மணி இருக்கும்.
பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு.. பெல்லாரியில் ஒருவர் கைது.. யார் அந்த ஆசாமி! பரபர தகவல்
இதையடுத்து ரவா இட்லியை சாப்பிட்டு முடித்ததும் அவர் தான் கொண்டு வந்திருந்த பையை அங்கேயே வைத்துவிட்டு உணவகத்தை விட்டு வெளியேறிவிட்டார். பின்னர் மதியம் 12.55 மணிக்கு, அதாவது, ஒரு மணி நேரம் கழித்துதான் குண்டு வெடித்தது. சிசிடிவி காட்சிகளை கொண்டு அந்த நபரை தேடும் பணிகள் நடைபெற்று வந்தன. குண்டுவெடிப்பு என்பதால் இந்த வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது.
குண்டுவைத்த அந்த மர்ம நபர் ராமேஸ்வரம் கஃபே அருகே மப்ளர், மாஸ்க் அணிந்திருந்தாலும் ஒரு பேருந்தில் பயணம் செய்த போது அவர் முகம் நன்றாக தெரிந்தது. இதை வைத்து உள்ளூர் மக்களின் உதவியை போலீஸார் நாடினர். இந்த நிலையில் சபீரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications