கர்நாடகா முதல்வராக சித்தராமையா மே 20-ல் பதவியேற்பு: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!
பெங்களூர்: கர்நாடகா முதல்வராக சித்தராமையா நாளை மறுநாள் பெங்களூருவில் பதவியேற்க உள்ளார். இப்பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக நாளை மாலை பெங்களூரு செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனையடுத்து புதிய முதல்வர் யார் என்பதை முடிவு செய்வதில் பெரும் இழுபறி நீடித்தது. டெல்லியில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் நடந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தது.

பெங்களூருவில் நாளை மறுநாள் கர்நாடகா முதல்வராக சித்தராமையாவும் அவரது அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது. இப்பதவியேற்பு விழாவில் ஒத்த கருத்து கொண்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுப்போம் எனவும் காங்கிரஸ் மேலிடம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை, காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சித்தராமையா முதல்வர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். இதேபோல சித்தராமையாவும் முதல்வர் ஸ்டாலினிடம் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஏற்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பெங்களூருவில் மே 20-ந் தேதி நடைபெறும் கர்நாடகா முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளார். இதற்காக நாளை மாலை பெங்களூரு புறப்பட்டுச் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

விவாதமான முதல்வர் வாழ்த்து: முன்னதாக கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, காங்கிரஸ் தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். அத்துடன் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி பெரும் பேசுபொருளாக இப்போது வரையிலும் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது வாழ்த்து செய்தியில், கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது. பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்! எனவும் தெரிவித்திருந்தார். திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது.என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து பாஜகவினர் தொடர்ந்து பதிலளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications