ச்சீ.. பெண்கள் தொழுகை நடத்திய மசூதிக்குள் புகுந்து..அட்டூழியம் செய்த இளைஞர்.. கர்நாடகாவில் பரபரப்பு
கர்நாடகாவில் மத ரீதியான பிளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையான பிரச்சாரங்கள் கர்நாடகாவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உடுப்பியில் உள்ள ஹொஸா மார்குடி கோவிலில் நடக்கும் விழாவில் இஸ்லாமியர்கள் கடை போட தடை விதிக்கப்பட்டது.

கட்டுப்பாடுகள்
அதேபோல் கர்நாடகாவில் ஹலால் பொருட்களை வாங்க கூடாது என்றும் இந்துக்கள் இடையே பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தளங்களில் லவுட் ஸ்பீக்கர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் கடைகளை புறக்கணிக்க வேண்டும் என்று கடுமையாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

மசூதி
இந்த நிலையில் கர்நாடகாவில் மங்களூரில் உள்ள மசூதி ஒன்றில் தவறாக நடந்து கொண்டதற்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் தொக்கோட்டு கிராமத்தில் உள்ள ஹூடா ஜும்மா மசூதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கு பெண்கள் தொழுகை அறைக்குள் புகுந்து சுஜித் ஷெட்டி என்ற இளைஞர் தவறாக நடந்து கொண்டு இருக்கிறார்.

பெண்கள்
இவர் கர்கலா பகுதியை சேர்ந்தவர். 26 வயதாகும் சுஜித், மசூதிக்குள் நுழைத்து தன்னுடைய ஆடையை கழற்றி தவறான சைகைகளை செய்ததாக கூறப்படுகிறது. போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அந்த இளைஞர் தன்னுடைய பேண்டை நீக்கிவிட்டு உள்ளாடை இன்றி நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அங்கு இருந்த பெண்கள் சிலரிடம் அவர் தவறாக நடக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

மிரட்டல்
அதோடு அங்கு இருந்த பெண்களை வெளியேற விடாமல் சில நிமிடங்கள் அங்கேயே இவர் இங்கும் அங்கும் நடந்து இருக்கிறார். வழியை மறைத்துக்கொண்டு பெண்களை மிரட்டி உள்ளார். அதோடு பெண்களை மோசமான வார்த்தைகள் சொல்லி திட்டி இருக்கிறார். உள்ளேயே இருந்த பெண்கள் சிலர் உடனே தங்கள் வீட்டு ஆண்களுக்கு போன் செய்து அழைத்தனர். அவர்கள் வந்து அந்த இளைஞரை பிடித்து இழுத்து வெளியே அழைத்து சென்றனர்.

தவறாக நடந்தார்
இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் சுஜித் கைது செய்யப்பட்டுள்ளார். மசூதியில் தொழுகைக்கு சென்ற பாத்திமா, பாயிஸா, ஆசியா உள்ளிட்ட பெண்கள் மீது சுஜித் மீது புகார் அளித்தனர். இந்த நிலையில் சுஜித் மீது ஐபிசி 448, 354, 509, 295 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது. போலீசார் சுஜித்தை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications