மாண்டு போன கணவர்.. கண்ணீர் விட்டு கதறிய மனைவி! ‘அந்த’ வார்த்தையை சொன்னதுமே.. டக்குனு எழுந்துட்டாரே!
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தவர் மரணம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் அவரது உடலை இறுதிச் சடங்கிற்காக உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது மனைவி ஹோட்டல் ஒன்றின் பெயரை சொல்லி வாங்க சாப்பிடுவோம் என கண்ணீர் விட்டு கதறிய போது அந்த நபர் திடீரென கண் விழித்து எழுந்து அமர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த உலகமே பல அதிசயங்கள் நிறைந்தது இன்று போல் நாளை இல்லாமல் போகலாம். நம்மோடு இல்லை என நினைப்பவர்கள் திடீரென வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அப்படி ஒரு சம்பவம் தான் கர்நாடகாவில் நடைபெற்று இருக்கிறது.

இறந்து போனவர் என கருதப்பட்டு போஸ்டர் அடித்து கொட்டப்பட்ட நபர் திடீரென எழுந்து வந்த சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறி இருக்கிறது. கர்நாடக மாநிலம் மஞ்சுநாத் நகர் பங்காப்பூர் பகுதியைச் சேர்ந்த 45 வயதான பிஸ்தாபா குடிமணி என்பவர் தான் அந்த நபர். கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவரது மனைவி ஷீலா தர்வாரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கல்லீரல் பிரச்சனை இருப்பது தெரியவந்தது. மேலும் மஞ்சள் காமாலை பாதிப்பும் இருந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமான நிலையில் பேச்சு மூச்சு இன்றி மயக்க நிலையில் இருந்திருக்கிறார் பிஸ்தப்பா.
இதை அடுத்து அவர் இறந்து விட்டதாக கூறிய மருத்துவர்கள் அவரது உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். அவரது மனைவி ஷீலா மற்றும் உறவினர்கள் பங்கப்பூர் கிராமத்திற்கு கொண்டு சென்றனர். இடையில் அவர் இறந்து விட்டதாக போஸ்டர்களும் அச்சடிக்கப்பட்டு பல பகுதிகளில் ஒட்டப்பட்டது. மேலும் சமூக வலைதளங்களிலும் அந்த போஸ்டர் பரவிய நிலையில் ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர்.
வீட்டில் பந்தல் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டு மயானத்தில் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளும் நடைபெற்றது. செல்லும் வழியெங்கும் கணவனின் உடலை பார்த்து கதறி அழுதபடி வந்த சில ஒரு ஹோட்டலை பார்த்ததும் வெடித்து அழுதுள்ளார். அங்கு தான் பிஸ்தாபா ஷீலாவும் அடிக்கடி உணவு சாப்பிடுவார்களாம். அந்த இடத்தில் வந்த போது நாம் எப்போதும் சாப்பிடும் ஹோட்டல் வந்திருக்கிறது வாங்க சாப்பிடுவோம் என அவர் உடல் மீது விழுந்து அழுதுள்ளார்.
அப்போதுதான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது. மரணம் அடைந்து விட்டதாக கருதப்பட்ட பிஸ்தபாவின் கண்கள் விழித்தது. உடலில் அசைவு ஏற்பட்டது. இதை அடுத்து அவர் உயிரோடு இருப்பதை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்த ஷீலா உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்திட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உயிர் இருப்பதாக கூறி முதலுதவி சிகிச்சை அளித்து கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தினர். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக பேசியுள்ள கிம்ஸ் மருத்துவமனை இயக்குனர் கம்மார்," நேற்று மருத்துவமனைக்கு பிஸ்தப்பா வரும்போது அவரது உடலில் உயிர் இருந்தது. தற்போது அவரது மருத்துவ அறிக்கைகளின் படி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் அறிக்கையில் பல தவறான தகவல்கள் இருக்கிறது. மேலும் சில விதிமுறைகளும் மீறப்பட்டு இருக்கிறது. தெரிய வந்துள்ளது. தற்போது அவர் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்" என கூறியுள்ளார்.
இந்த நிலையில் பிஸ்தபா மரணம் அடைந்ததாக வாட்ஸ் அப் குழுக்களில் ஆர்ஐபி ஸ்டேட்டஸ் வைத்தவர்கள் தற்போது அவர் மீண்டும் உடல் நலம் பெற்று வர வேண்டும் என வாழ்த்து கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications