போலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்த இளைஞர்.. அடுத்து ஸ்டேஷனில் நடந்த சம்பவம்.. ஒன்னு கூடிட்டாங்களே

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற இளைஞர் வாக்குவாதம் செய்தார். போலீஸ்காரர் அவரது தலையில் அடித்தார். கோபமான இளைஞர் உடனடியாக போலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து போலீஸ்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த இளைஞரை சரமாரியாக தாக்கினர். இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கர்நாடகாவில் உள்ள மண்டியா மாவட்டம் பாண்டபுரா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் சாகர் (வயது 32). இவருக்கு உறவினர் லட்சுமி நாராயண் (60) என்பவருக்கும் சொத்து பிரச்சனை இருந்து வருகிறது.

karnataka mandya police

இதுதொடர்பாக லட்சுமி நாராயண் சார்பில் சாகருக்கு எதிராக பாண்டவபுரா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சாகரை விசாரணைக்கு அழைத்தனர். அதேபோல் லட்சுமி நாராயணையும் போலீசார் அழைத்து இருந்தனர்.

இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது புகார்தாரர் லட்சுமி நாராயண் மற்றும் சாகருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அபிசேக் மற்றும் ஆனந்த் ஆகியோர் தலையிட்டு சாகரை சமாதானம் செய்தனர். இந்த வேளயைில் திடீரென்று போலீஸ்காரர் ஒருவர் சாகரின் தலையில் அடித்தார்.

இதனால் கோபமான சாகர் சட்டென திரும்பி தன்னை அடித்த போலீஸ்காரரின் கன்னத்தில் ‛பளார்'என அடித்தார். அதோடு போலீஸ்காரரின் சட்டையை பிடித்து சாகர் வாக்குவாதம் செய்தார். இதையடுத்து அங்கிருந்த போலீஸ்காரர்கள், எஸ்ஐக்கள் வந்து சாகரை சமாதானப்படுத்தினர். ஆனால் அவர் சமாதானம் ஆகாமல் போலீஸ்காரர்களை தாக்க முயன்றனர். பெண் போலீசை அடிக்க பாய்ந்தார்.

இதையடுத்து பிற போலீஸ் அதிகாரிகள், போலீசார் என அனைவரும் சேர்ந்து சாகரை சரமாரியாக தாக்கினர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதுபற்றி மண்டியா எம்பி மல்லிகார்ஜுன் பாலதண்டி கூறுகையி்ல, ‛‛சொத்து தகராறு விஷயத்தில் புகார்தாரர் மீது சாகர் தாக்குதல் நடத்தி உள்ளார். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணைக்கு வரும்படி சாகருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.

விசாரணைக்கு வந்த சாகர் புகார்தாரர் மட்டுமின்றி போலீசாரிடம் கோபமாக நடந்துள்ளார். போலீஸ்காரரை தாக்கி உள்ளார்.இதுதொரட்பாக சாகர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+