கடும் வயிற்று பசி! பெங்களூர் டிராபிக்கில் நகராத கார்! ஸ்மார்ட்டாக யோசித்த நபர்! அடடே செம - வீடியோ
பெங்களூர்: தொடர் விடுமுறையால் நேற்று பெங்களூரில் பல சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு கிலோமீட்டர் தொலைவை கடக்கவே 2 மணிநேரம் ஆனதால் பள்ளி மாணவர்கள் இரவில் தான் வீடு போய் சேர்ந்தனர். இத்தகயை சூழலில் தான் வயிற்று பசி தாங்காமல் காரில் சென்ற நபர் செய்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
பெங்களூர்.. இந்தியாவில் உள்ள முக்கிய நகரான இங்கு பல ஐடி நிறுவனங்கள் உள்ளன. இதனால் இந்தியாவின் சிலிக்கான வேலி என்ற புனைப்பெயருடன் அழைக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆண்டுதோறும் பெங்களூர் நகரின் மக்கள்தொகை என்பது தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.

தற்போதைய சூழலில் பெங்களூர் நகரின் மக்கள்தொகை என்பது 1 கோடியை கடந்தும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் ஒவ்வொரு நாளும் வாகனங்களின் எண்ணிக்கை உயர்வதோடு, சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் என்பது ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் நேற்று மாலையில் பெங்களூர் நகரின் பல முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக அவுட்டர் ரிங் ரோடு, ஓசூர் ரோடுகளில் வாகனங்கள் நிரம்பி வழிந்தன. இதனால் அந்த சாலைகள் முற்றிலுமாக ஸ்தம்பித்து போயின. வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் ஒரு கிலோமீட்டர் தொலைவை கடக்க சுமார் 2 மணிநேரம் வரை ஆனது.
இதன் காரணமாக நேற்று மாலையில் பள்ளி, கல்லூரி முடித்து வீடு திரும்பிய மாணவர்கள், அலுவலகலகத்தில் இருந்து வீடு திரும்பியோர் என அனைவரும் இரவில் தான் தங்கள் இருப்பிடத்தை சென்றடைந்தனர். நேற்று ஏற்பட்ட இந்த கடுமையான டிராபிக்கிற்கு முக்கிய காரணம் தொடர் விடுமுறையாகும்.
இன்று மிலாடி நபி விடுமுறையாகும். நாளை கர்நாடகா பந்த் என்பதால் பல நிறுவனங்கள் விடுப்பு அளித்துள்ளன. அதன்பிறகு சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை என்பதோடு, திங்கட்கிழமை என்பது காந்தி ஜெயந்தி விடுமுறையாகும். இதனால் பலரும் பெங்களூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பியதால் தான் இந்த போக்குவரத்து நெரிசல் என்பது ஏற்பட்டது.
இத்தகைய சூழலில் தான் பெங்களூரில் நேற்று நிலவிய கடும் போக்குவரத்து நெரிசலில் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது ரிஷிவத்ஸ் என்பவர் நேற்றைய போக்குவரத்து நெரிசலில் காரில் சிக்கி கொண்டார். மாற்று பாதையில் பயணிக்க முடியாத சூழலில் ஆமை வேகத்தில் அவர் காரை ஓட்டி கொண்டிருந்தார். சில மணிநேரமாகும் மிகமிக குறைந்த தொலைவை தான் அவரது கார் கடந்து இருந்தது.
இதற்கிடையே அவருக்கு பசி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பீட்சா சாப்பிட விரும்பினார். இதையடுத்து அவர் தனது செல்போனில் இருந்து டெமினோஸில் பீட்சா ஆர்டர் செய்தார். இதையடுத்து டொமினோஸ் டெலிவரி ஊழியர்கள் 2 பேர் அவரது காருக்கே வந்து பீட்சாவை ஆர்டரை வழங்கிவிட்டு சென்றனர்.
இதுபற்றி ரிஷிவத்ஸ் டிராபிக்கில் பீட்சா ஆர்டர் பெற்ற 30 வினாடி வீடியோவை தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் ‛‛புதன்கிழமை டிராபிக்கில் பசி என்னை அதிகம் தாக்கியது. இதனால் காரில் இருந்து டோமினேஸில் பீட்சா ஆர்டர் செய்தேன். டிராபிக்கில் நாங்கள் சிக்கியிருந்த நிலையில் லைவ் லோகேஷனை கண்டுபிடித்து ஆர்டர் செய்த இடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவு கடந்திருந்த எங்களை கண்டுபிடித்து டொமினோஸ் ஊழியர்கள் டெலிவரி செய்து கருணை காட்டினார்கள்'' என கூறியுள்ளார். இவரது இந்த பதிவு மற்றும் வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications