ஆதார் போதும்.. ஆன்லைனில் திருமண சான்றிதழ்.. அசத்திய கர்நாடகா.. தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வருமா?
பெங்களூர்: கர்நாடகாவில் திருமணத்தை ஆன்லைனிலேயே பதிவு செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டிருக்கிறது. திருமணத்தை பதிவு செய்ய சார் பதிவாளர் அலுவலகத்திற்கு இனி போக வேண்டியதில்லை, வீட்டில் இருந்தபடியே ஆவணங்கள் மூலம் அப்ளை செய்து, சான்றிதழை டவுன்லோடு செய்ய முடியும்.
தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் திருமணத்தைப் பதிவு செய்வது கட்டாயம் ஆகும். அப்படி பதிவு செய்தால் மட்டுமே பாஸ்போர்ட், விசா உள்பட முதல் பல்வேறு விஷயங்களுக்கு உதவியாக இருக்கும். இதேபோல் திருமணம் பதிவு செய்தால் மட்டுமே அரசின் திருமண உதவி தொகைகளையும் பெற முடியும்.

இதன் காரணமாக திருமணமான ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை தவறாமல் பதிவு செய்கிறார்கள். திருமணப் பதிவு குறித்து ஒவ்வொரு மதத்துக்கும் ஏற்றவாறு சட்டங்கள் இருக்கின்றன. இந்தச் சட்டங்களின் அடிப்படையில்தான் திருமணங்கள் பதிவு செய்யப்படுகிறது. இந்தப் பதிவு கடந்த 2009-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் கட்டாயம் ஆகும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்வது கட்டாய நடைமுறைகளாக உள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை திருமணத்தைப் பதிவுசெய்துகொள்ள, நீங்கள் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு போக வேண்டும். ஆனால் அதற்கு முன்பு பல்வேறு ஆவணங்களை ஸ்கேன் செய்து மணமக்களின் புகைப்படங்களுடன் சேர்த்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பித்த பின்னரே திருமணத்தைப் பதிவு சார் பதிவாளர் அலுவலகம் வர வேண்டிய தேதி மற்றும் நேரம் குறிப்பிட்டு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கும் பதிவு துறை.
அதன்பிறகு குறிப்பிடப்பட்ட தேதியில் உங்களின் ஆன்லைன் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து, அசல் ஆவணங்களுடன் உங்களின் இணையர் மற்றும் சாட்சி கையொப்பமிட மூன்று நபர்களுடன் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு போக வேண்டும். இதுதான் தமிழகத்தில் தற்போது வரை உள்ள நடைமுறையாகும்.
Now one doesn't have to visit the sub-registrar's office for registering their marriage under Hindu Marriage Act. A cerificate is generated at the comfort of home by providing wedding invite,video, Aadhaar. One more step towards transparency and service delivery. #revenue #gok… pic.twitter.com/a233SlXO9l
— Krishna Byre Gowda (@krishnabgowda) February 15, 2024
இதனிடையே தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் திருமணத்தை ஆன்லைனிலேயே பதிவு செய்யும் நடைமுறை பிப்ரவரி 15ம் தேதி முதல் (நேற்று) கொண்டுவரப்பட்டிருக்கிறது. திருமணத்தை பதிவு செய்ய சார் பதிவாளர் அலுவலகத்திற்கு இனி போக வேண்டியதில்லை, வீட்டில் இருந்தபடியே ஆவணங்கள் மூலம் அப்ளை செய்து சான்றிதழை பெற முடியும்.
கர்நாடகாவில் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய, இப்போது ஒருவர் சார் பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. திருமண அழைப்பிதழ், வீடியோ, ஆதார் ஆகியவற்றை ஆன்லைனில் அப்லோடு மூலம் வீட்டில் இருந்தபடியே திருமண சான்றிதழை டவுன்லாடு செய்யலாம். வெளிப்படைத்தன்மையுடன் சேவைகளை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல இந்தமுயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.
இந்த வசதியை மல்லேஸ்வரம் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று கர்நாடகா மாநில வருவாய்த் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா தொடங்கி வைத்தார். நேற்று இதன்படி இரண்டு ஆன்லைன் திருமண பதிவுகள் நடந்தன. இம்மாத இறுதிக்குள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து துணை பதிவாளர் அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கர்நாடகாவில் 150 ஆண்டுகளுக்கான சொத்து ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களும் ஆன்லைனில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications