பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.. இடப்பங்கீடு பேச்சுவார்த்தை?
பெங்களூர்: லோக்சபா தேர்தல் தொடர்பான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. பெங்களூரில் இன்றும் நாளையும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனை செய்கின்றன.
லோக்சபா தேர்தல் தொடர்பான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. பெங்களூரில் இன்றும் நாளையும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனை செய்கின்றன.
மொத்தம் 24 கட்சிகளின் தலைவர்கள் இன்று பெங்களூரில் சந்திக்க உள்ளனர். தேசிய அளவில் மாநில கட்சிகள், எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக கைகோர்க்க தொடங்கி உள்ளன. திமுக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்தனர்.

கடந்த கூட்டத்தில் 14 கட்சிகள் பீகாரில் உள்ள பாட்னாவில் கலந்து கொண்ட நிலையில் இந்த முறை கூடுதல் கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றன. காங்கிரஸ் கட்சி சார்பாக இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் இதில் பங்கேற்றுள்ளன. கடந்த முறை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முழுக்க முழுக்க கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்த நிலையில் இந்த முறை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளார்.
அதேபோல் கர்நாடக முதல்வர் சித்தராமையா, ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் ஆகியோர் கூட்டத்திற்கு முன்னதாக ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். லோக்சபா தேர்தலில் என்ன செய்வது? பாஜகவை எப்படி எதிர்கொள்வது, கூட்டணி அமைப்பதா, இடங்களை பகிர்ந்து கொள்வதா? பொது வேட்பாளர்களை அறிவிப்பதா என்பது உள்ளிட்ட விஷயங்களை ஆலோசனை செய்ய உள்ளனர்.
இந்த கூட்டத்தில் முன்னதாக ஆம் ஆத்மி கட்சி பங்கேற்பதில் குழப்பம் நிலவியது. டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகளை மாநில அரசுக்கு பதிலாக மத்திய அரசு மாற்றும் அதிகாரத்தை வழங்கும் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி காங்கிரஸ் கட்சிக்கு கோரிக்கை விடுத்தது. கடந்த மீட்டிங்கிலேயே இருவருக்கும் இடையில் இதனால் மோதல் ஏற்பட்டது.
இதில் காங்கிரஸ் முடிவு எடுத்தால்தான் எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வோம் என்றும் ஆம் ஆத்மி கூறியது. இந்த நிலையில்தான் இந்த மசோதா விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக செயல்பட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்தை எதிர்க்கவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதையடுத்து தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்தார்.
கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு க ஸ்டாலின், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, திருமாவளவன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இது தவிர, சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே மற்றும் எம்பி சஞ்சய் ராவத் ஆகியோர் இந்த மிக முக்கியமான கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
கடந்த கூட்டத்தில் திமுக கட்சி முக்கியமான 7 ஐடியாக்களை கொடுத்தது. அதன்படி 1) ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவாக உள்ள ஒரு கட்சியின் தலைமையில் மாநில வாரியாக கூட்டணி அமைக்கலாம். 2) அது சாத்தியமில்லை என்றால், நேரடிக் கூட்டணி இல்லாமலேயே சீட்-பகிர்வு ஏற்பாடு செய்யலாம்.
3) இரண்டும் சாத்தியமில்லை என்றால், ஒரு பொது வேட்பாளரை அறிவிக்கலாம். 4) தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி சரியான முடிவாக இருக்காது. 5) அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே பொதுவான குறைந்தபட்ச தேர்தல் பிளான் வகுக்கப்பட வேண்டும். 6) கட்சிகளுக்கு இடையே எழக்கூடிய ஏதேனும் பிரச்சனைகளை தீர்க்க, ஒரு நடவடிக்கை குழு அமைக்கப்படும்.
7) பிரதமர் வேட்பாளர் குறித்து இப்போது முடிவு எடுக்க வேண்டியது இல்லை, என்பது உள்ளிட்ட ஐடியாக்களை திமுக கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தேர்தல் இடப்பங்கீடு குறித்து ஆலோசனை நடைபெறலாம் எனத் தெரிகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பெயர் வைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
-
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications