மேகதாது அணை.. கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் ஆலோசனை
மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க கர்நாடக அரசு சார்பில் பெங்களூரில் தற்போது ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.
Recommended Video

பெங்களூர்: மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க கர்நாடக அரசு சார்பில் பெங்களூரில் தற்போது ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முடிவெடுத்து இருக்கிறது. இது பெரிய திட்டமாக போடப்பட்டுள்ளது. இது காவிரியில் கர்நாடகாவிற்கு கூடுதல் நீரை பெற்றுத்தரும்.

இதற்காக வரைவு அறிக்கையை அம்மாநில அரசு மத்திய அரசிடம் சமர்ப்பித்து இருந்தது. தற்போது மத்திய அரசு இந்த அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்டு இருக்கும் பச்சை துரோகம் ஆகும்.
நேற்று தமிழக அரசு, மேகதாது விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பை மீறி கர்நாடக அரசு செயல்பட்டு இருப்பதாக தமிழக அரசு வழக்கு தொடுத்து இருக்கிறது. அதேபோல் இது தொடர்பாக இன்று தமிழக சட்டசபை கூட உள்ளது.
இதில் இந்த பிரச்சனை தொடர்பாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதற்கு மத்தியில் கர்நாடகாவிலும் இது தொடர்பாக தற்போது ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
கர்நாடக அரசு சார்பில் முதல்வர் குமாரசாமி தலைமையில் பெங்களூரில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இதில் கர்நாடக மாநில அமைச்சர், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். தமிழக அரசின் வழக்கை எப்படி எதிர்கொள்வது என்று இதில் விவாதிக்க உள்ளனர். கூட்டத்திற்கு பின் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications