மேகதாது அணை கட்டியே தீருவோம்... கர்நாடகா பிடிவாதம் : தமிழக அரசுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்
மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக கர்நாடக சட்டசபையில் இன்று கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
பெங்களூர்: மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக கர்நாடக சட்டசபையில் இன்று கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மேகதாது திட்டத்திற்கு தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது சட்டவிரோதமானது என்றும் அரசியல் அமைப்பு, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார் . அதற்கு பதில் அளிக்கும் வகையில் இங்கு கர்நாடக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் கனகபுரா அருகே மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே புதியதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த மேகதாது அணை ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து, மத்திய ஜல்சக்தி துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதிக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இன்னும் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்காமல் இருந்து வருகிறது.

ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு
இந்த விவகாரத்தில் தமிழகம்-கர்நாடகம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும் என்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே கர்நாடக பட்ஜெட்டில் மேகதாது அணை கட்ட ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் தீர்மானம்
இந்த நிலையில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் திங்கட்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. தீர்மானத்திற்கு அனைவரும் ஆதரவு தெரிவித்து பேசியதை அடுத்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கர்நாடக சட்டசபையில் பேச்சு
இந்த விவகாரம் கர்நாடக சட்டசபையிலும் எதிரொலித்தது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 13வது நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் பிறகு பூஜ்ஜிய நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் எச்.கே.பட்டீல் எழுந்து, தமிழக அரசு சட்டசபையில் மேகதாது திட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்திருப்பது குறித்து பிரச்சினை கிளப்பி பேசினார்.

தமிழக அரசு குறுக்கீடு
தமிழக அரசு சட்டசபையில் மேகதாது திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் கா்நாடகத்தின் திட்டத்திற்கு தமிழக அரசு குறுக்கீடாக நிற்கிறது என்று எச்.கே பட்டீல் கூறினார். உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது. ஆனால் மேகதாது பிரச்சினையை பெரிதுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு செயல்பட்டு வருவது சரியல்ல.

குடிநீர் திட்டம்
மேகதாது திட்டத்திற்கு பயன்படுத்துவது தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நீர் அல்ல. கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்ட நீர் பங்கீட்டில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அத்துடன் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. பெங்களூருவுக்கு குடிநீர் தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை கண்டிக்கிறோம். அவர்களுக்கு பதில் கூறும் வகையில் நமது சட்டசபையிலும் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று கூறினார்.

பசவராஜ் பொம்மை
அதைத்தொடா்ந்து முன்னாள் முதல்வரான சித்தராமையா, எடியூரப்பா, குமாரசாமி ஆகியோர் பேசும்போது, தமிழக அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டனர். இறுதியில் இந்த விவாதத்திற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலளித்து பேசும்போது மேகதாது திட்டத்தில் கர்நாடக அரசின் நிலைப்பாடு மிக தெளிவாக உள்ளது என்றார்.

தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை
நமது நீர், நமது நிலத்தில் மேகதாது திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இந்த மேகதாது திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அத்துடன் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்சாரம் உற்பத்தி செய்வதால் ஒரு சொட்டுநீர் கூட வீணாவது இல்லை. அது தமிழ்நாட்டிற்கே செல்லும். இந்த திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய நீர் ஆணையம் மற்றும் காவிரி நிர்வாக ஆணையத்தில் கர்நாடகம் எடுத்து கூறியுள்ளது. அதற்கு தேவையான விவரங்களையும் கூறியுள்ளோம். தமிழகத்திற்கு பொதுவான ஆண்டுகளில் 177.25 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அதை விட கூடுதலாகவே நீர் தமிழகத்திற்கு சென்றுள்ளது.

பெங்களூருவுக்கு குடிநீர்
தமிழக அரசு, தனது பகுதியில் பல்வேறு குடிநீர் திட்டங்களை மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசின் அனுமதி பெறாமல் அமல்படுத்தியுள்ளது. தற்போது 2வது கட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை அமல்படுத்துவதாக அந்த மாநிலம் அறிவித்துள்ளது. இதற்கு கர்நாடகம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இதை நீதிமன்றத்திற்கும் எடுத்து சென்றுள்ளோம். கர்நாடகம் தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீரை பயன்படுத்த தமிழகம் குறுக்கீடு செய்கிறது. பெங்களூரு நகருக்கு முன்பு 9 டி.எம்.சி. காவிரி நீரை பயன்படுத்த முடிவு செய்தபோதும் தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு அதை கர்நாடகம் பயன்படுத்தியது.

மத்திய அரசுக்கு அழுத்தம்
மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். அதன் மூலம் அனுமதி பெறுவோம். மேகதாது திட்டத்திற்கு தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது சட்டவிரோதமானது. அரசியல் அமைப்பு, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. அதற்கு பதில் அளிக்கும் வகையில் இங்கு கர்நாடக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். இதன் சாதக-பாதகங்கள் குறித்து நேற்று மாலையே சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்கப்படும். சட்டசபையில், தமிழக அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்.

மேகதாது அணை கட்டியே தீருவோம்
கர்நாடக அரசை பொறுத்தவரையில் மேகதாது திட்டத்தில் தனது நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது. மேகதாது திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம். அணையை கட்டியே தீருவோம். இதில் அரசு உறுதியாக உள்ளது. டெல்லிக்கு அனைத்துக்கட்சி குழுவை அழைத்து செல்ல ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடர் முடிவடைந்ததும் டெல்லி செல்வோம். பெங்களூருவில் கன்னடர்கள் மட்டுமின்றி அனைத்து மொழி பேசும் மக்களும் உள்ளனர். அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டி இருக்கிறது என்று பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். இந்த நிலையில் தமிழக அரசின் தீர்மானத்திற்கு எதிராக கர்நாடகா சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications