மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் மேகதாது அணை- கர்நாடகா சித்தராமையா பிடிவாதம்- திமுகவுக்கு நெருக்கடி!
பெங்களூர்: மத்தியில் காங்கிரஸ் தலைமையில் "இந்தியா" கூட்டணி ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதியளித்துள்ளார். கர்நாடகா காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவின் இந்த வாக்குறுதி தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடியை தந்துள்ளது.
லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறுகிறது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் உச்சகட்ட பிரசாரம் நடைபெறுகிறது.

லோக்சபா தேர்தலுக்காக திமுக தேர்தல் அறிக்கையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட அனுமதிக்கமாட்டோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேர்தல் அறிக்கையை கர்நாடகாவில் ஆளுகிற- திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து வருகிறது. காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்கிறது கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு.
இதனிடையே கர்நாடகாவில் பெங்களூர் தெற்கு தொகுதியில் அம்மாநில முதல்வர் சித்தராமையா நேற்று பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தில், கர்நாடகா காங்கிரஸ் அரசு மக்களுக்கான நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தும். இந்தத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு பாடம் புகட்ட வேண்டும். பெங்களூரில் தற்போது 60% பேருக்குதான் காவிரி குடிநீர் கிடைக்கிறது. பெங்களூரில் அனைவருக்கும் காவிரி நீர் கிடைக்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் போது மேகதாதுவில் அணையை கட்டியே தீருவோம். இதற்காக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தர வேண்டும் என்றார்.
கர்நாடகாவில் லோக்சபா தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. கர்நாடகாவில் முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 26-ந் தேதி நடைபெறும். அங்கு 2-வது கட்ட வாக்குப் பதிவு மே 7-ந் தேதி நடைபெற உள்ளது. பெங்களூர் உள்ளிட்ட தெற்கு கர்நாடகாவில் உள்ள 14 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும். இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்து இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டுவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications