முதலில் பெட்ரோல், அடுத்து பால் விலை! மக்களை வாட்டி வதைக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசு!
பெங்களூர்: கர்நாடகாவில் வரி உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த நிலையில் தற்போது பால் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதால் அம்மாநில மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் நந்தினி பால் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஒரு லிட்டர் பால் விலை ரூ.42 இல் இருந்து ரூ.44 ஆகவும் அரை லிட்டர் பால் ரூ.22 இல் இருந்து ரூ.24 ஆகவும் உயர்ந்துள்ளது.

கர்நாடக அரசு எரிபொருள் மீதான விற்பனை வரியை உயர்த்திய சில நாட்களில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3.5 ரூபாயும் உயர்ந்தது. இந்நிலையில் தற்போது பால் விலையும் அதிகரித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் பால் கூட்டுறவு நிறுவனமான KMF, நந்தினி என்ற பிராண்ட் பெயரில் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. நந்தினி தென்னிந்தியாவின் முன்னணி கூட்டுறவு பால் பிராண்டாக செயல்பட்டு வருகிறது. 27 லட்சத்திற்கும் அதிகமான பால் பண்ணையாளர்களிடம் இருந்து பாலை கொள்முதல் செய்து, அதன் உறுப்பு பால் சங்கங்கள் மூலம் பால் பதப்படுத்தி வருகிறது.
தற்போது அறுவடை காலம் என்பதால் அனைத்து மாவட்ட பால் ஒன்றியங்களிலும் பால் சேமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தற்போது ஒரு கோடி லிட்டரை நெருங்குகிறது. இந்நிலையில் ஜூன் 26 முதல் நந்தினி பாலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்படும் என்று கர்நாடக பால் கூட்டமைப்பு (KMF)அண்மையில் அறிவித்தது.
அதன்படி, 500 மி.லி மற்றும் 1000 மி.லி பாக்கெட்டுகளில் கூடுதலாக 50 மி.லி பால் அதிகமாக சேர்க்கப்பட்டு திருத்தப்பட்ட விலையில் கிடைக்கும். ஒவ்வொரு பாக்கெட்டின் விலையும் ரூ.2 உயர்த்தப்பட்டு இள்ளது.
பால் விலை நிலவரம்: நீல நிற பாக்கெட் பால் (டோன்டு மில்க்): ரூ. 42 லிருந்து 44 ஆக உயர்வு
ப்ளூ பாக்கெட் (ஒரே மாதிரியான டோன்ட் பால்): ரூபாய் 43 ல் இருந்து ஆக உயர்வு.
ஆரஞ்சு பாக்கெட் பால் (ஒரே மாதிரியான பசுவின் பால்): 46 ரூபாயில் இருந்து 48 ஆக உயர்வு.
ஆரஞ்சு ஸ்பெஷல் பால்: 48 ரூபாயில் இருந்து 50 ஆக உயர்வு.
சுபம் பால்: 48 ரூபாயில் இருந்து 50 ஆக உயர்வு.
சம்ரித்தி பால்: 51 ரூபாயில் இருந்து 53 ஆக உயர்வு.
சுபம் (ஒரே மாதிரியான டோன்டு பால்): 49 ரூபாயில் இருந்து 51 ஆக உயர்வு.
சுபம் கோல்டு பால்: 49 ரூபாயில் இருந்து 51 ஆக உயர்வு.
சுபம் டபுள் டோன்டு பால்: 41 ரூபாயில் இருந்து 43 ஆக உயர்வு.
நாட்டின் மிகப்பெரிய பால் கூட்டுறவு நிறுவனமான அமுல், இந்த மாதம் இரண்டாம் தேதி பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியது. அதைத் தொடர்ந்து மதர் டெய்ரி நிறுவனமும் தனது பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியது. இந்நிலையில் நந்தினி பால் நிறுவனமும் பால் விலையை 2 ரூபாய் உயர்த்தி உள்ளது. ஓராண்டுக்குள் இது இரண்டாவது விலை உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற மாநிலங்களில் பால் விலையுடன் ஒப்பிடுகையில், திருத்தப்பட்ட விலை இன்னும் குறைவாகவே உள்ளது என்று கர்நாடக அரசு இந்த முடிவை ஆதரித்துள்ளது. இதற்கிடையில், தற்போதைய விலைவாசி உயர்வுக்கு கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசை எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி விமர்சித்து உள்ளது.
கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை 3.50 ரூபாய் வரை உயர்ந்ததைத் தொடர்ந்து பால் விலையையும் உயர்த்தப்பட்டு உள்ளதால் கர்நாடக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications