குற்ற பின்னணி கொண்டவர்களுக்கே அதிக வெற்றி வாய்ப்பு: க்ளீன் வேட்பாளர்கள் நிலை? இதான் கர்நாடகா டேட்டா!
பெங்களூர் : கர்நாடக அரசியலில் கடந்த 10 ஆண்டு காலத்தில் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள், க்ளீன் வேட்பாளர்களைக் காட்டிலும் எளிதாக அதிகளவில் வெற்றி பெற்றுள்ளதாக ஏடிஆர் ரிப்போர்ட் தெரிவிக்கிறது.
கர்நாடகாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கியவர்கள், எம்.எல்.ஏக்களின் பின்னணிகளை ஆய்வு செய்துள்ளது ஏடிஆர் அமைப்பு.
அந்த அறிக்கையின்படி, கர்நாடகாவில் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களே இதுவரை அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கர்நாடகா தேர்தல்
கர்நாடக மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற சூழல் உள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. ஆளும் பாஜக கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. அதேபோல் கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கட்சியும் தீவிரம் காட்டி வருகிறது.

ஏடிஆர் ரிப்போர்ட்
ஏடிஆர் என்ற ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகளின் நிலவரம், வெற்றி வாய்ப்பு, எம்எல்ஏக்கள் கல்வித் தகுதி, சொத்து மதிப்பு, கிரிமினல் வழக்கு பின்னணி ஆகியன பற்றிய தகவல்களை வெளியிடும். அந்த வகையில் விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் கர்நாடகாவில் எம்எல்ஏக்கள் பற்றி ஓர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி கர்நாடகாவில் தற்போதுள்ள 224 எம்எல்ஏக்களில் 219 பேரின் கிரிமினல் வழக்குகள் பின்னணி, நிதி நிலவரம், கல்வித் தகுதி உள்ளிட்ட தகவல்களை ஏடிஆர் வெளியிட்டுள்ளது.

கிரிமினல் குற்றப் பின்னணி
கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ள வேட்பாளர்களை நிறுத்துவதில் பாஜக முன்னிலை வகித்துள்ளது. பாஜகவின் 112 எம்எல்ஏக்களில் 49 பேர், காங்கிரஸின் 67 எம்எல்ஏக்களில் 16 பேர், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் 30 எம்எல்ஏக்களில் 9 பேர் மற்றும் 4 சுயேச்சை எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்களில் 35 பாஜக எம்எல்ஏக்கள், 13 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் 8 மதச்சார்பற்ற எம்எல்ஏக்கள் மீது மிக மோசமான கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன.

வெற்றி வாய்ப்பு அதிகம்
ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (ADR) மற்றும் கர்நாடக தேர்தல் கண்காணிப்பு (KEW) ஆகியவற்றின் ஆய்வின்படி, கர்நாடக அரசியலில் கடந்த 10 ஆண்டுகளில், குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள், க்ளீன் பின்னணி கொண்ட வேட்பாளர்களைக் காட்டிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கூறியுள்ளது. எந்தவித குற்றப் பின்னணியும் இல்லாத வேட்பாளர்கள் வெற்றிபெற 7% வாய்ப்புகள் இருந்தபோதிலும், குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் என ஏடிஆர் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பண பலம் தான்
கர்நாடகா சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கட்சிகள் வேட்பாளர் பட்டியலை தயாரித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சி சார்பில் 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிரசாரத்தில் அனைத்துக் கட்சிகளும் கிரிமினல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை மாற்றி மாற்றி சுமத்தி வந்தாலும், எந்தக் கட்சியும் கடுமையான குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்று இதுவரை உறுதியளிக்கவில்லை. வேட்பாளர்களின் பண பலம் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஏடிஆர் அறிக்கை கூறுகிறது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications