பூதாகரமாக வெடிக்கும் முடா விவகாரம்.. "நிலத்தை திருப்பி தருகிறேன்.." சித்தராமையா மனைவி திடீர் கடிதம்!
பெங்களூர்: முடா விவகாரம் தொடர்பாக இப்போது சித்தராமையா மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தச் சூழலில் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில், தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனைகளைத் திரும்பித் தரத் தயாராக உள்ளதாக சித்தராமையா மனைவி பார்வதி முடா வாரியத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடகாவில் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம், அதாவது முடா என்ற வாரியம் இருக்கிறது.. கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு இந்த முடா வாரியம் 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்ததே தாரகமாக வெடித்துள்ளது.

இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் சமூக ஆர்வலர்கள் அம்மாநில ஆளுநரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து விசாரணைக்கு ஆளுநரும் சம்மதம் தெரிவித்தார். இருப்பினும், அதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார் சித்தராமையா..
விளக்கம்: தனது மனைவிக்கு சொந்தமான இடத்தை முடா வாரியம் எடுத்துக் கொண்டதாகவும் அதற்கு இழப்பீடாகவே இந்த 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டதாகவும் சித்தராமையா கூறியிருந்தார். இருப்பினும், முடா வாரியம் எடுத்த நிலத்தின் மதிப்பிற்கும் இழப்பீடு வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பும் வெவ்வேறு இருப்பதாகக் கூறிய கர்நாடக ஐகோர்ட் இதில் விசாரணை நடத்தத் தடையில்லை என்று தீர்ப்பளித்தது.
இந்த வழக்கை இப்போது லோக் அயுக்தா போலீஸ் விசாரித்து வருகிறார்கல். இதற்கிடையே திங்கள்கிழமை அமலாக்கத் துறையும் இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்தது. அமலாக்க துறை ஏற்கனவே பல ஊழல் புகார்களைப் பல மாநில முதல்வர்கள், அமைச்சர்களைக் கைது செய்திருந்தன. இதனால் அவர்கள் தங்கள் பதவிகளையும் இழக்க நேரிட்டது. இப்போது சித்தராமையா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எங்கு அவர் மீதும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுமோ என அவரது ஆதரவாளர்கள் கவலையில் உள்ளனர்.
திடீர் கடிதம்: இந்தச் சூழலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் சித்தராமையாவின் மனைவி பார்வதி முடா அமைப்பிற்குக் கடிதம் எழுதியுள்ளார். தனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தைத் திருப்பி தருவதாகத் தெரிவித்துள்ள பார்வதி, முடா தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்தும் விரிவான விசாரணையை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடவடிக்கை தேவை: கேசரே கிராமத்தில் உள்ள தனது 3.16 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியதற்கு இழப்பீடாக விஜயநகர் 3 மற்றும் 4ஆம் கட்டங்களில் தனக்கு ஒதுக்கப்பட்ட 14 மனைகளை மீன்டும் முடா வாரியத்தற்கு ஒப்படைக்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில் மேலும், "மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் எனக்கு வழங்கிய 14 மனைகளின் பத்திரங்களை ரத்து செய்து, இழப்பீட்டைத் திருப்பித் தர விரும்புகிறேன். இது தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்கவும்.
திடீரென இந்த முடிவை ஏன் எடுத்தீர்கள் என்ற கேள்வி எழலாம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் குற்றச்சாட்டுகள் எழுந்த அன்றே இந்த முடிவை நான் எடுத்துவிட்டேன். ஆனால், முடா ஒதுக்கீடு தொடர்பான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்பதால், அதற்கு எதிராகப் போராட வேண்டுமே தவிர சரணந்துவிடக்கூடாது என்று சில நலன் விரும்பிகள் அறிவுறுத்தினர். இதன் காரணமாகவே அப்போது நான் இடத்தை திருப்பி தரவில்லை.
சித்தராமையா: எனது கணவர் மாநில முதலமைச்சரான சித்தராமையா, தனது 40 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் நெறிமுறைகளோடு வாழ்ந்துள்ளார். எந்தவொரு கறையும் இல்லாமல் பொது வாழ்க்கையில் இருந்துள்ளார். என் கணவரின் மானம், கண்ணியம் மற்றும் மன அமைதியை என்பதை அனைத்தையும் விட முக்கியமானது.. இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிறகும், எனக்கோ என் குடும்பத்துக்கோ ஆதாயம் தேடவில்லை. இது நான் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவு.
அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடம் நான் ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து உங்கள் அரசியல் லாபத்திற்காக குடும்பப் பெண்களைத் தேவையில்லாமல் இதில் இழுக்க வேண்டாம்" என்று அதில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications