ஆம்னி செய்த "அந்த" ஒரு தப்பு.. அடுத்தடுத்து மோதிய 6 கார்கள்.. பெங்களூர் ஏர்போர்ட் சாலையில் பதற்றம்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் விமான நிலைய சாலையில், அடுத்தடுத்து கார்கள் மோதி மோசமான விபத்து அரங்கேறியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்தியாவில் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நமது நாட்டில் வாகன ஓட்டிகளின் பாதிப்பை உறுதி செய்ய பல்வேறு விதிகள் இருந்தாலும் அதை முறையாகப் பின்பற்றுவதில்லை என்பதே பிரச்சினையாக இருக்கிறது.

இதனால் நமது சாலைகள் ஆபத்தான ஒன்றாக மாறுகிறது. இப்படி சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேரை இழக்கிறோம். கடந்த 2022இல் மட்டும் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்டோரை நாம் சாலை விபத்தால் இழந்துள்ளோம்.
கார் விபத்து: கர்நாடகா மாநிலம் பெங்களூரு விமான நிலைய சாலையில் தொட்டஜாலா என்ற பகுதியில் விபத்து ஒன்று அரங்கேறியுள்ளது. அங்கே இன்று காலை கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இன்று காலை மாலை சிக்கஜாலா மேம்பாலத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி டிரண்டாகி வருகிறது.
அதேநேரம் அடுத்தடுத்து கார்கள் மோதினாலும் கூட இதில் நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அதேநேரம் இந்த விபத்தில் சிலர் காயமடைந்தனர். அவர்கள் அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கே அவர்களுக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
மொத்தம் 6 கார்கள்: இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. இந்த விபத்தில் ஆறு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் சிக்கியது அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், துல்லியமான காரணம் இதுவரை நமக்குத் தெரியவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிக்கஜாலா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இந்த தொடர் விபத்தால் அங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது விமான நிலையத்திற்குச் செல்லும் சாலை என்பதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கார்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை க்ளியர் செய்தனர்.
என்ன நடந்தது: இன்று காலை அங்கே டிராபிக் சற்று அதிகமாக இருந்துள்ளது. அப்போது மாருதி ஆம்னியை ஒட்டி வந்த நபர், லேன் மாறும் போது திடீரென பிரேக் போட்டுள்ளார். பின்னால் வந்தவர்கள் இதைச் சற்றும் எதிர்பார்க்காத நிலையில், கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications