ஹிஜாப் எங்க உரிமை.. அவங்களை விடலைனா நாங்க வரமாட்டோம் -மாணவிகளுக்கு ஆதரவாக குதித்த இஸ்லாமிய மாணவர்கள்
பெங்களூர்: கர்நாடகாவில் பியூ கல்லூரிகளில் ஹிஜாப் விவகாரம் பெரிதாக்கிக்கொண்டு இருக்கிறது. அங்கு வரிசையாக பல்வேறு கல்லூரிகளில் இந்த புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கர்நாடகாவில் பியூ கல்லூரிகளில் இந்து மாணவர்கள் சிலர் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவ பிரிவான ஏபிவிபி உள்ளிட்ட இந்து மாணவ அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இஸ்லாமிய மாணவிகள் எதிராக இந்த எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர்.
அது மட்டுமின்றி இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர்கள் காவி துண்டு அணிந்து வகுப்பிற்கு வந்து போராட்டமும் நடத்தி உள்ளனர்.

இஸ்லாமிய மாணவிகள்
இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்தால், நாங்கள் காவி துண்டு அணிவோம். அவர்கள் மத அடையாளங்களோடு வகுப்பறைக்கு வர கூடாது. அவர்கள் வந்தால் நாங்களும் வருவோம் என்று கூறி இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவர்கள் பலர் போராடி வருகிறார்கள். இவர்களில் பலர் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்பை சேர்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உடுப்பி, சிக்மங்களூர், மங்களூர், சிவமொக்கா போன்ற பகுதிகளில் உள்ள பியூ கல்லூரிகளில் இந்த மோதல் நடந்து வருகிறது.

ஹிஜாப்
இதையடுத்து கர்நாடகாவில் பல்வேறு பியூ கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருவது தடை செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் கல்லூரி நிர்வாகம் தடுத்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் மாணவிகள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாமல் வெளியே துரத்தப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

கர்நாடகா ஹிஜாப்
இது தொடர்பான வீடியோக்கள் கூட நேற்று இணையத்தில் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பியூ கல்லூரி மட்டுமின்றி யுஜி, பிஜி கல்லூரிகளிலும் இதே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. உடுப்பியில் உள்ள குண்டபுரா அரசு பியூ கல்லூரியில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் நுழைய தடை விதைக்கப்பட்டுள்ளது. நேற்று 40க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு உள்ளே நுழைய அனுமதி அளிக்காமல் வெளியே வைத்து அவர்களை தலைமை ஆசிரியர் பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

குந்தபுரா
இந்த நிலையில் தற்போது கர்நாடகாவில் குந்தபுரா பகுதியில் இஸ்லாமிய மாணவர்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். பியு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய மாணவர்கள் களமிறங்கி போராடி வருகிறார்கள். மாணவிகளை உள்ளே அனுமதிக்கவில்லை என்றால் நாங்களும் வர மாட்டோம். அவர்களை உள்ளே அனுமதிக்கும் வரை நாங்களும் போராடுவோம் என்று கூறி மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே அமர்ந்து போராடி வருகிறார்கள்.

கர்நாடகா பியு கல்லூரி
இதனால் அங்கு பெரிய பரபரப்பை ஏற்பட்டுள்ளது. மாணவிகளை இஸ்லாமியர்கள் என்பதால் வெளியே நிறுத்தி வைத்துள்ளனர். அப்படி என்றால் நாங்களும் இஸ்லாமியர்கள்தான். அவர்களை உள்ளே விடும் வரை நாங்கள் உள்ளே வர மாட்டோம் என்று கூறி மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராடி வருகிறார்கள். இதனால் அங்கு இந்து - இஸ்லாமிய மாணவ, மாணவியர் இடையே மிகப்பெரிய பிளவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications