என் மருமகள் நடத்தை தான் சரியில்லை! பிரஜ்வல், ரேவண்ணா மீது செக்ஸ் புகாரளித்த பெண்ணின் மாமியார் தடாலடி
பெங்களூர்: கர்நாடகாவில் ஆபாச வீடியோ வழக்கு அதிர வைத்துள்ளது. இதுதொடர்பாக முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஜேடிஎஸ் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையான ரேவண்ணா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் புகார் அளித்த பெண்ணின் மாமியார் கூறியுள்ள கருத்து இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் கட்சியின் நிறுவன தலைவருமான தேவகவுடாவின் மகன் ரேவண்ணா. இவர் ஹாசன் மாவட்டம் ஹொலேநரசிப்புரா எம்எல்ஏவாக உள்ளார். ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா ஜேடிஎஸ் சார்பில் ஹாசன் எம்பியாக உள்ளார்.

இப்போது லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவும், ஜேடிஎஸ்சும் கூட்டணியாக உள்ளது. அதன்படி பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் ஹாசனில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் சார்பில் களமிறங்கி உள்ளார். கடந்த 26ம் தேதி இந்த தொகுதிக்கு தேர்தல் முடிந்தது.
இதற்கிடையே தான் பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களுடன் சேர்ந்து நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் பரவ தொடங்கியது. அவர் 300க்கும் அதிகமான பெண்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோவாக எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. சுமார் 3000க்கும் அதிகமான ஆபாச வீடியோக்களை பென்டிரைவில் வைத்துள்ள நிலையில் அதில் இருந்து பல வீடியோக்கள் கசிந்துள்ளன. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் உள்ள பெண்கள், உதவி கோரி வரும் பெண்கள், அரசு பெண் அதிகாரிகளை குறிவைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகா அரசியலில் இந்த மேட்டர் புயலை கிளப்பி உள்ளது. கர்நாடகா அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணையை தொடங்கிய நிலையில் பிரஜ்வெல் ரேவண்ணா ஜெர்மனி சென்றுவிட்டார். இதற்கிடையே தான் நேற்று பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை ரேவண்ணா மீது அவர்களின் வீட்டில் வேலை செய்த முன்னாள் பெண் ஊழியர் ஹாசன் போலீசில் புகாரளித்தார்.
அந்த புகாரவில் ரேவண்ணாவின் மனைவி பவானி வீட்டில் இல்லாத நேரத்தில் ரேவண்ணா பாலியல் தொல்லை அளித்தார். அதேபோல் அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணாவும் தவறாக நடந்து கொண்டார். அதுமட்டுமின்றி எனது மகளுக்கு வீடியோ கால் செய்து தொல்லை அளித்ததோடு மிரட்டினார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த பெண் ரேவண்ணா வீட்டில் வேலை செய்யாத நிலையில் அவரது புகார் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த புகாரின் பேரில் தந்தை ரேவண்ணா, மகன் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்திய தண்டனை சட்டப்பிரிவு 354ஏ (பாலியல் தொல்லை), 354 டி (பின்தொடருதல்), 506 (மிரட்டுதல்), 509 (பெண்ணின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ மட்டுமே வெளியான நிலையில் தற்போது அவரது தந்தை ரேவண்ணாவும் வீட்டில் வேலை பார்த்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று ரேவண்ணா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் புகாரளித்த பெண்ணின் மாமியார் கவுரம்மா ஹாசனில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: எங்களின் கஷ்டம், நஷ்டத்தை பவானி(ரேவண்ணாவின் மனைவி - பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய்) அம்மா தான் பார்த்து கொள்கிறார். ஆனாலும் ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுக்கு முந்தைய சம்பவம் தொடர்பாக இப்போது புகார் அளிப்பது உள்நோக்கமாக உள்ளது. புகார் அளித்த என் மருமகளின் நடத்தை சரியில்லை.
ஏனென்றால் ரேவண்ணா மீது புகார் அளித்துள்ள எனது மருமகள் கடந்த 5 ஆண்டுக்கு முன்பே அவரது வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள். ஆனால் இப்போது தான் புகார் அளித்துள்ளார். இதன் பின்னணி நோக்கம் வேறாக இருக்கிறது. தேவகவுடா குடும்பத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எனது மருமகளின் நோக்கமாக உள்ளது. ரேவண்ணா எங்கள் குடும்பத்துக்கு கடவுள் போன்றவர். அவரது மனைவி பவானி எங்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். இப்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான வீடியோவில் உண்மையில்லை'' என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications