ஏதோ ஒரு மாற்றம் இருக்கு.. வாக்காளர்கள் ஆர்வமாக இருக்காங்க.. பிரகாஷ் ராஜ் சொல்றதை பாருங்க
பெங்களூர்: பெங்களூர் மத்திய தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த நடிகர் பிரகாஷ் ராஜ், மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை பார்க்கும் போது ஏதோ ஒரு மாற்றம் இருக்கிறது என்று பேசினார். மேலும், இன்று லைனில் நிற்கவில்லை என்றால் வருடம் முழுக்க நிற்க வேண்டியிருக்கும் என்றும் அவர் பேசினார்.
லோக்சபா தேர்தலுக்கான 2-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்தியபிரதேசம் என மொத்தம் 13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.

கேரளா (20 தொகுதிகள்), கர்நாடகா (14), ராஜஸ்தான் (13), உத்தரபிரதேசம் (8), மகாராஷ்டிரா (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), பீகார் (5), சத்தீஸ்கர் (3), மேற்கு வங்கம் (3), மணிப்பூர் (1), திரிபுரா (1), காஷ்மீர் (1) போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள்.
அந்த வகையில், பெங்களூர் மத்திய தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரகாஷ் ராஜ் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதை பார்க்கின்ற போது ஏதோ மாற்றம் வரப்போகிறது என்று கருதுகிறேன் என கூறினார். அவர் கூறியதாவது:-
வாக்களிப்பது ரொம்ப முக்கியமான விஷயம். நீங்க தேர்ந்தெடுக்க போறவர்கள்தான் எதிர்காலத்தை முடிவு செய்ய போகிறவர்கள். நீங்கள் ஓட்டு போடவில்லை என்றால் கேள்வி கேட்கும் தகுதியும் உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய்விடும். குறிப்பாக முதல் முறை வாக்காளர்களுக்கு இது அற்புதமான அனுபவம். அது ஒரு அதிகாரம்.. உங்கள் தலைவர், பிரதிநிதியை தேர்வு செய்யுங்கள்.
7 மணிக்கு என்றால் 7 மணிக்கு வரவேண்டும்.. இத்தனை பேர் வந்து இருக்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு மாற்றம் இருக்கு.. அவுங்க ஆர்வத்துடன் வருகிறார்கள் என்றால் அவுங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது அல்லவா... இன்னைக்கு ஒருநாள் லைனில் நிற்க வேண்டியதுதானே.. இல்லையென்றால் வருஷம் முழுவதும் லைனில் நிற்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications