தீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி!

கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் கட்டீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கடைசி நிமிடம் வரை எதையும் சொல்லாத அமித்ஷா.. ஷாக் ஆன எடியூரப்பா - வீடியோ

    பெங்களூர்: கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் கட்டீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்த்ததை அடுத்து எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.மஜத - காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் 17 பேர் ராஜினாமா கடிதம் அளித்ததால் ஆட்சி கவிழ்ந்தது.

    Nalin Kumar Niranjan Shetty Kateel appointed as the new BJP head for Karnataka State

    இந்த நிலையில் இந்த பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின் அங்கு இத்தனை நாட்களாக அமைச்சர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தனர். இன்று காலைதான் கர்நாடகாவில் அமைச்சரவை அறிவிக்கப்பட்டது. முதல்வர் எடியூரப்பா இன்று காலைதான் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார்.

    இந்த நிலையில் கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் கட்டீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

    18 வயதில் இருந்து தீவிர அரசியலில் இருக்கும் நளின் குமார் கட்டீல் தொடக்கத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்துவிட்டு பின் பாஜகவில் இணைந்தார். இவர் தற்போது கர்நாடகாவை சேர்ந்த தட்சிண கன்னடா தொகுதி எம்பியாக இருக்கிறார்.

    இதற்கு முன் சான்சத் தொகுதியில் இவர் 2004 மற்றும் 2014ல் எம்பியாக இருந்தார். இவர் மீது சில சொத்து குவிப்பு புகார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+