அதிகரித்த டென்ஷன்.. நம்ம நிலம்.. நம்ம உரிமை! காவிரி பிரச்சனையில் நடிகர் சுதீப் பரபர அறிக்கை!
பெங்களூர்: காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் ‛நம்ம நிலம்.. நம்ம உரிமை' என நடிகர் சுதீப் பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்த தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்றுடன் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் தான் தமிழகத்துக்கான தண்ணீர் திறப்பை உடனே நிறுத்த மண்டியாவில் பந்த் நடந்தது. இன்று பெங்களூரில் பந்த் நடந்து வருகிறது. மேலும் வரும் 29 ம் தேதி கர்நாடகா முழுவதும் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் காவிரி விஷயத்தில் கர்நாடகாவில் நடக்கும் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் கன்னட திரையுலகை பல்வேறு அமைப்பினர் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் நடிகர் கிச்சா சுதீப் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:
கன்னட மக்களுக்கு வணக்கம், காவிரி பிரச்சனை என்பது மீண்டும் உருவாகி உள்ளது. கன்னட அமைப்பினர், விவசாய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடகாவின் நிலம், நீர், மொழிக்கான போராட்டத்தில் நான் உங்களுடன் இருக்கிறேன். பருவமழை குறைந்த காரணத்தினால் விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய மட்டுமின்றி குடிக்கவும் தண்ணீர் கிடைப்பதில் பிரச்சனை உருவாகி உள்ளது. நமக்கு குடிநீருக்கு வேறு ஆதாரங்கள் இல்லை. காவிரியை மட்டுமே நம்பி இருக்கிறோம்.

மேலும் நிபுணர் குழுஆய்வு மூலம் மாநிலத்தின் நீர்இருப்பை காவிரி தீர்ப்பாயம் மற்றும் உச்சநீதிமன்றத்திடம் தெரிவிக்க வேண்டும். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வை பேச்சுவார்த்தை மூலம் காண வேண்டும். மேலும் வறட்சி நிவாரணங்கள் வழங்க வேண்டும்.
கர்நாடகா நிலைமையை மத்திய அரசிடம் எடுத்துக்கூற அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும். இதை அனைத்தையும் விரைந்து செயல்டுத்த வேண்டும். அதேபோல் பிற பிரச்சனையகளாக கிருஷ்ணா நதிநீர், மகாதாயி மற்றும் கலசா பண்டூரி திட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும். நம்ம நிலம் நம்ம உரிமை'' என கூறியுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications