பெங்களூர் மெட்ரோ ரயிலில் உணவு சாப்பிட்ட பெண்.. பின்னாடியே வீடு தேடி வந்த பெரிய பில்.. பாருங்க

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் மெட்ரோ ரயில் நிலையம், மெட்ரோ ரெயிலில் செல்போனில் வீடியோ, புகைப்படம் எடுக்கக்கூடாது. உணவு சாப்பிடக்கூடாது. மதுபானங்கள், பீடி, சிகரெட், புகையிலைப்பொருட்களை பயன்படுத்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது பெங்களூர் மெட்ரோ நிர்வாகம் (பி.எம்.ஆர்.சி.எல்) அபராதம் விதிக்கும். அந்த வகையில் மாதவராவில் இருந்து மாகடி ரோட்டுக்கு வந்த மெட்ரோ ரெயிலில் பயணித்த பெண் சாப்பிட்டதற்காக 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஐடி தலைநகரம் எனறு போற்றப்படும் பெங்களூரில் மெட்ரோ ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் ஒடுகிறது. பெங்களூர் மெட்ரோ ரயில் சேவையினை தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்துக்கிறார்கள். நம்ம மெட்ரோ என்ற பெயரில் ஓடும் பெங்களூர் மெட்ரோ ரயில்களில் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் செல்போனில் வீடியோ, புகைப்படம் எடுக்கக்கூடாது. உணவு சாப்பிடக்கூடாது. மதுபானங்கள், பீடி, சிகரெட், புகையிலைப்பொருட்களை பயன்படுத்தவும் கட்டுப்பாடுகள் உள்ளன.

Namma Metro Woman fined Rs 500 for eating while sitting in Bangalore Metro train

இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது பெங்களூர் மெட்ரோ நிர்வாகம் (பி.எம்.ஆர்.சி.எல்) அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த ஏப்ரல் 26-ந் தேதி மாதவராவில் இருந்து மாகடி ரோட்டுக்கு வந்த மெட்ரோ ரெயிலில் பயணித்த பெண் ஒருவர், உணவு சாப்பிட்டிருக்கிறார். இதை ரயிலில் பயணித்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் தொடர்பான சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இதை கவனத்தில் எடுத்து கொண்ட மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் அந்த பெண்ணை அடையாளம் கண்டு, அவருக்கு ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்.

முன்னதாக கடந்த இரண்டு வாரம் முன்பு பெங்களூர் மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்தில், பொது இடம் என்று கூட பார்க்காமல், மற்ற பயணிகள் முன்பு காதலியை கண்ட இடத்தில் தொட்டு இளைஞர் முத்தமிட்ட சம்பவம் அரங்கேறியிருந்தது. பெங்களூர் மெஜஸ்டிக் ரயில் நிலைய பிளாட்பார்மில் இளம் காதல் ஜோடிகள் கடந்த இரண்டு வாரம் முன்பு நின்று கொண்டிருந்தனர்.

ரயிலில் ஏறுவதற்காக பிளாட்பாரத்தில் நின்ற அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் இளம்பெண்ணை அவரது காதலர் கண்ட இடத்தில் கை வைக்கிறார்.. முத்தம் கொடுக்கிறார்.. மற்ற பயணிகள் அருகில் இருக்கிறார்கள், பொது இடம் என்றெல்லாம் பார்க்காமல் இளம்பெண்ணை தொட்டு முத்தமிட்டுள்ளார். அந்த வீடியோ 1 நிமிடம் 30 நொடிகள் ஓடுவதாக இருந்தது.

இதனை சிலர் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இதையடுத்து காதல் ஜோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் அப்போது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+