கூட்டணி தலைமை, தொகுதி பங்கீடு-மும்பையில் எதிர்க்கட்சிகளின் 3-வது ஆலோசனை கூட்டம்: மல்லிகார்ஜூன கார்கே

Subscribe to Oneindia Tamil

பெங்களுர்: லோக்சபா தேர்தல் தொடர்பாக விவாதிக்க அனைத்து எதிர்க்கட்சிகளின் 3-வது ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெறும் என காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்துள்ளார்.

பெங்களூரில் காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாளாகவும் இந்த கூட்டம் நடைபெற்றது.

Next opposition Parties meeting will be held in Mumbai: Mallikarjun Kharge

இன்றைய கூட்டத்தில் கூட்டணியின் பெயர், கூட்டணிக்கான ஒருங்கிணைப்புக்குழு உள்ளிட்டவை முடிவு எடுக்கப்பட்டன. இது தொடர்பாக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:

26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு Indian National Developmental Inclusive Alliance (இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி) என பெயரிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க டெல்லியில் செயலகம் அமைக்கப்படும். எதிர்க்கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து செயல்பட 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களும் கூட்டணியின் பெயருக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி என செயல்பட்டோம். தற்போது இந்தியா கூட்டணியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய பெயர் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் அதாவது எதிர்க்கட்சிகளின் 3-வது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதேபோல ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற்றுள்ள 11 பேரின் பெயர்களும் விரைவில் அறிவிக்கப்படும்.

மும்பையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது? தொகுதி பங்கீட்டு உள்ளிட்ட விவரங்கள் விவாதிக்கப்படும். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கண்டு பிரதமர் மோடியும் பாஜகவும் அச்சப்படுகிறது. இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 9 ஆண்டுகாலத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு நாட்டை நிர்மூலமாக்கிவிட்டது. நாட்டின் அனைத்து துறைகளையும் பாஜக அரசு சீரழித்துவிட்டது என்றார்.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே பேசுகையில், மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசுகையில், இந்தியா கூட்டணியை தேசிய ஜனநாயகக் கூட்டணியால் வெல்ல முடியுமா? பிரதமர் நரேந்திர மோடிக்கு இதை சவாலாகவேவிடுக்கிறேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+