பெங்களூர் சிறையில் பிரபல நடிகை பவித்ரா கௌடா வீட்டு சாப்பாடு இல்லை? சிறை நிர்வாகம் அதிரடி
பெங்களூர் சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்பவரது வழக்கில் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது தோழி பவித்ரா கவுடா உள்பட சம்பந்தப்பட்டவர்கள் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் மீது வழக்கு விசாரணை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்நிலையில் நடிகை பவித்ரா கவுடா உள்பட 3 பேர் தினமும் ஒரு வேளை வீட்டு சாப்பாடு சாப்பிட நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.இதனை எதிர்த்துசிறை நிர்வாகம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம், பெங்களூர் அருகே உள்ள ஒரு கால்வாயில் 33 வயதாகும் ரேணுகாசாமி என்பவரை பிரபல கன்னட நடிகரான தர்ஷன் மற்றும் அவரது தோழி பவித்ரா கௌடா ஆகியோர், கடத்தி , சித்ரவதை செய்து கொலை செய்ததாக புகார் எழுந்தது.

பவித்ரா கௌடாவிற்கும் தரிசனுக்கும் இடையே உள்ள உறவு குறித்து, ரேணுகாசாமி சமூக வலைதளங்களில் ஆபாசமான மற்றும் அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டு வந்ததால்,ஆத்திரமடைந்த தர்ஷன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், சித்ரதுர்காவிலிருந்து ரேணுகாசாமியைக் கடத்தி வந்து, பெங்களூருவில் உள்ள ஒரு பட்டறையில் வைத்து கொடூரமாகத் தாக்கி கொன்றார்கள் என கூறப்படுகிறது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சிறையில் உள்ள பவித்ரா கவுடா மற்றும் நாகராஜூ, லட்சுமணன் ஆகியோர் தாங்கள் வீட்டு உணவை சாப்பிட அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி அவர்களது கோரிக்கையை ஏற்ற பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டு நீதிபதி தினமும் இரவு ஒரு வேளை மட்டும் வீட்டில் சமைத்த உணவை வழங்க கடந்த டிசம்பர் 30ம்தேதி அனுமதித்ததார்
இதனால் சிறை உணவுகளுக்கு பதிலாக வீட்டில் இருந்து சமைத்து கொண்டு வரும் உணவுகளையே தினமும் அவர் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. , அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகும், சிறை அதிகாரிகள் இதுவரை வீட்டு உணவுகளை வழங்கவில்லை.
இதற்கிடையில், வித்ரா கவுடாவுக்கு வீட்டு உணவு வழங்க கோர்ட்டு வழங்கியுள்ள அனுமதியை எதிர்த்து, சிறை நிர்வாகம் சார்பில் இன்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருக்கிறதாம். பவித்ரா கவுடாவுக்கு வீட்டு உணவு வழங்கினால், அதன்பிறகு நடிகர் தர்ஷன் உள்ளிட்ட பிற கைதிகளும் வீட்டு உணவு கேட்டு நீதிமன்றத்திற்கு செல்லலாம். எனவே சிறையிலேயே தரமான உணவு வழங்குவதாகவும், அதனால் வீட்டு உணவு வழங்க பவித்ரா கவுடாவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என அந்த மனுவில் சிறை நிர்வாகம் தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது..
ஹாவேரியில் உள்ள பவித்ரா கவுடாவின் வழக்கறிஞர் பாலன் கூறுகையில் பவித்ரா கவுடா தொலைக்காட்சி பார்க்கவும் நூலகத்தைப் பயன்படுத்தவும் அனுமதி உள்ளது. சிறைச்சாலை மெனுவில் வீட்டு உணவைச் சட்டம் அனுமதிக்கிறது . சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதை கேட்டு விண்ப்பித்தார் . நீதிபதி தனி விண்ணப்பத்தை தாக்கல் செய்யச் சொல்லியிருந்தார். வீட்டில் சமைத்த உணவைக் கேட்பது உங்கள் உரிமை. சிறைக்குள் சிறைச்சாலை மெனு உள்ளது. வீட்டில் சமைத்த உணவுக்கும் இதே போன்ற நிபந்தனைகள் உள்ளன . நோயாளிகள் சிறை உணவை சாப்பிட முடியாது" என்று கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications