மேகதாது அணை திட்டம்.. தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. வீண் அரசியல் செய்கிறது- சித்தராமையா அதிரடி
Recommended Video

பெங்களூர்: மேகதாது அணை திட்டத்திற்கு தமிழகத்தின் அனுமதி தேவையே இல்லை என முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட ரூ. 5600 கோடி ஒதுக்கியுள்ளது. இதற்கான அனுமதியையும் மத்திய அரசிடம் இருந்து வாங்கிவிட்டது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சித்தராமையா
இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் குறித்து முன்னாள் முதல்வர்கள், முன்னாள் நீர் வள அமைச்சர்கள், சட்ட அமைச்சர்களுடன் முதல்வர் குமாரசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது முன்னாள் முதல்வர் சித்தராமையா பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

உத்தரவில்
அவர் கூறுகையில் நம் இடத்தில் மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த எந்த தடங்கலும் இருக்கக் கூடாது. உச்சநீதிமன்றத் தீர்ப்புகளும் நமக்கு சாதகமாகவே உள்ளன. எந்த உத்தரவிலும் மேகதாது அணையை செயல்படுத்த கூடாது என கூறவில்லை.

அரசியல் செய்யவே
எனவே இந்த திட்டத்திற்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை. எதிர்ப்பு தெரிவிக்க தமிழகத்திடம் எந்த ஆதாரமும் இல்லை. ஆனாலும் அரசியல் செய்வதற்காகவே தமிழக அரசு இப்பிரச்சினையை எழுப்புகிறது. கர்நாடகத்தின் திட்டம் நியாயமானது. எனவே உச்சநீதிமன்றத்திற்கு தேவையான விவரங்களை கர்நாடக அரசு வழக்கறிஞர்கள் வழங்க வேண்டும்.

மாநில தேர்தலுக்காக ...
ஒரு வேளை இந்த திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டால் அதை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படும். அதனால் தடை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதால் இந்த பிரச்சினையை அந்த மாநில அரசு தீவிரமாக கொண்டுள்ளது என்றார் சித்தராமையா.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications