‘Not drunk, avoiding potholes'.. காரின் பின்னால் இருந்த வாசகம்.. பெங்களூருவுக்கு தலைக்குனிவு
பெங்களூர்: மதுபானம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அது ஆபத்தை ஏற்படுத்தும். மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டும்போது சாலையில் அங்கும், இங்குமாக வாகனம் தடுமாறி செல்லும். இந்நிலையில் தான் பெங்களூரில் உள்ள சாலை பள்ளங்களை குறிக்கும் வகையில் ஒருவர் தனது காரின் பின்னால், ‛‛Not Drunk avoiding Potholes' என ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் போட்டோ இணையதளங்களில் பரவி வருகிறது.
பெங்களூரில் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் உள்ளன. நம் நாட்டின் முக்கியமான நகரங்களில் ஒன்றாக பெங்களூர் உள்ளது. இந்தியாவின் ‛சிலிக்கான் சிட்டி' என்று பெங்களூர் அழைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பெங்களூரில் உள்ள சாலைகள் மோசமாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. குறிப்பாக சாலைகளின் நடுவே ஆங்காங்கே பெரிய பெரிய பள்ளங்கள் உள்ளன. இதனால் ஐடி பணியாளர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் சிரமப்பட்டு வருகின்றனர்.
விரைவில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ளது. இதனால் சாலையில் உள்ள பள்ளங்கள் இன்னும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் சாலை பள்ளங்களை முன்கூட்டியே சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பல ஐடி நிறுவனங்களின் தலைவர்கள் இதுதொடர்பாக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.
அதன்படி தற்போது பெங்களூரில் உள்ள சாலை பள்ளங்களை சரிசெய்யும் பணியை அரசு தொடங்கி உள்ளது. ரூ.500 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு, 3 மாதத்தில் முழுவதுமாக சாலை பள்ளங்களை சரிசெய்ய காண்ட்ராக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தரம் குறைவாக சாலை போடும் காண்ட்ராக்டர்களை பிளாக் லிஸ்ட்டில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்படியான சூழலில் தான் இணையதளங்களில் ஒரு போட்டோ வேகமாக பரவி வருகிறது. அதாவது ஒரு காரின் பின்னால் Not Drunk Avoiding Potholes என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அதாவது நான், ‛‛மதுபானம் குடிக்கவில்லை. சாலையில் உள்ள பள்ளங்களை தவிர்ப்பதற்காக அங்கும், இங்குமாக வாகனம் ஓட்டுகிறேன்'' என்பதை காட்டும் வகையில் அந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
பொதுவாக மதுபானம் குடித்துவிட்டு ஓட்டும்போது வாகனம் அங்கும், இங்குமாக செல்லும். ஆனால் நான் மதுபானம் குடிக்கவில்லை. சாலை பள்ளங்களை தவிர்ப்பதற்காக இப்படி வாகனம் ஓட்டுகிறேன் என்பதை காட்டும் வகையில் அந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த போட்டோவை பெங்களூரில் செயல்பட்டு வரும் பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜூம்தார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு சிரிப்பது போன்ற இமோஜியுடன் அந்த பதிவை அவர் செய்துள்ளார்.
இது தற்போது கவனம் பெற்றுள்ளது. இதனை பார்க்கும் பலரும் வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் கர்நாடகா அரசையும், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமாரை விமர்சனம் செய்து வருகின்றனர். ஒருவர், ‛‛பெங்களூரில் உள்ள சாலை பள்ளங்களை சரிசெய்யும் வரை அனைவரும் இந்த ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்ட வேண்டும்'' என்று கூறி அரசை சீண்டி உள்ளார்.
இன்னொருவரோ, ‛‛அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்களும் உங்களின் அரசை வேடிக்கையாக கலாய்த்து வருகின்றனர். இதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும் சித்தராமையா'' என கோபத்தை கொப்பளித்துள்ளது. இன்னொருவரோ, ‛‛ட்வீட் ஆப் தி டே'' என கமெண்ட் செய்துள்ளார்.
இப்படி நாளுக்கு நாள் சாலை பள்ளங்களை வைத்து பொதுமக்களும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் கர்நாடகா அரசை சீண்டி வருவது முதல்வர் சித்தராமையா மற்றும் பெங்களூர் நகர வளர்ச்சி துறையை வைத்திருக்கும் துணை முதல்வர் டிகே சிவக்குமாருக்கு பிரஷரை அளித்து வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications