2,976 ஆபாச வீடியோ லீக்.. பிரஜ்வல்லின் அந்தரங்க பென் டிரைவ் மாஜி டிரைவரிடம் சிக்கியது எப்படி?
பெங்களூர்: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளன. இந்நிலையில் தான் ஆபாச வீடியோ என்பது பிரஜ்வல்லின் முன்னாள் டிரைவர் கார்த்தி மூலம் தான் வெளியாகி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கார்த்திக்கிடம் ஆபாச வீடியோ எப்படி சிக்கியது? பிரஜ்வல் ரேவண்ணா இடையே என்ன பிரச்சனை? எப்படி வீடியோ வெளியானது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா. ஜேடிஎஸ் எம்எல்ஏவாக உள்ள ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் ஹாசன் தொகுதி எம்பியாக மீண்டும் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் சார்பில் போட்டியிட்டுள்ளார். இந்த தொகுதிக்கு கடந்த மாதம் 26ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது.

முன்னதாக தேர்தலுக்கு முன்பு ஹாசன் தொகுதி முழுவதும் பென் டிரைவ்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் இருந்தன. மொத்தம் 2,976 ஆபா வீடியோக்கள் இருந்துள்ளன. அதில் பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.
இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனி சென்றுவிட்டார். தற்போது எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு ஆபாச வீடியோ விவகாரத்தில் பிரஜ்வல் ரேவண்ணா நேற்று கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதற்கிடையே தான் வீடியோ எப்படி வெளியானது என்பது பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ரேவண்ணா குடும்பத்தில் டிரைவராக இருந்த கார்த்திக்தான் இந்த வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை பாஜக பிரமுகர் தேவராஜே கவுடா (ரேவண்ணாவை எதிர்த்து பாஜக சார்பில் ஹேலேநரசிப்புரா தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர்) வழங்கியதாகவும், ஆனால் இப்போது அந்த வீடியோவை நான் வெளியிடவில்லை எனவும் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வெளியானதற்கு கார்த்திக் தான் காரணம் என்பது உறுதியாகி உள்ளது. இருப்பினும் இப்போது வெளியிட்டது பாஜகவின் தேவராஜே கவுடாவா? இல்லையென்றால் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளதால் அவர் காங்கிரஸ் கட்சியினரிடம் பென் ட்ரைவை வழங்கினாரா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையே தான் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கும், முன்னாள் டிரைவர் கார்த்திக்கிற்கும் இடையேயான உறவு, பிரச்சனை பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது கார்த்திக்கின் சொந்த ஊர் ஹோலோநரசிப்புரா. இந்த தொகுதியின் எம்எல்ஏ தான் ரேவண்ணா. இந்நிலையில் தான் ரேவண்ணாவின் குடும்பத்தில் கடந்த 15 ஆண்டுகளாக டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் ரேவண்ணாவின் குடும்பத்தில் உள்ள அனைவருடன் நெருக்கமாக பழகினார். சொல்லப்போனால் ரேவண்ணாவின் குடும்ப உறுப்பினர் போன்றே அவர் இருந்தார். பிரஜ்வல் ரேவண்ணாவின் செல்போன் உள்பட பிற எலக்ட்ரானிக் பொருட்கள் உள்பட பலவற்றை கையாளும் வகையில் அவர் அதிகாரமிக்கவராக வலம் வந்தார். இதன் மூலம் தான் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோவை கார்த்திக் பார்த்து பென்ட்ரைவில் ‛காப்பி' செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் கடந்த 2023ம் ஆண்டு தான் பிரஜ்வல் மற்றும் கார்த்திக் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதாவது கார்த்திக்கின் தாய் பெயரில் 13 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பிரஜ்வல் ரேவண்ணா அபகரித்துள்ளார். ஆனால் கார்த்திக் மற்றும் அவரது தாய் கடுமையாக எதிர்த்துள்ளனர். இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா கார்த்திக் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் கார்த்திக் , ரேவண்ணாவின் குடும்பத்தை விட்டு விலகினார்.
இதற்கிடையே தான் கடந்த ஆண்டு ஜுன் மாதம் சில ஆபாச போட்டோ மற்றும் வீடியோக்கள் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பாக வெளியானது. இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா, கார்த்திக் உள்பட 3 தனிநபர்கள் மற்றும் மீடியாக்களின் பெயரை குறிப்பிட்டு தடை வாங்கி இருந்தார். இதுதான் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பாக ஆபாச வீடியோ, போட்டோ பிரச்சனையின் முதல் படியாகும்.
அதன்பிறகு கடந்த 2023 டிசம்பர் மாதம் பிரஜ்வல் ரேவண்ணா தன்னையும், மனைவியையும் கடத்தியதாக கார்த்திக் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த ஜனவரியில் இந்த வீடியோ விவகாரம் மீண்டும் கிளம்பியது. அதாவது பாஜக பிரமுகரும், ஹோலேநரசிப்புரா தொகுதியில் கடந்த ஆண்டு ரேவண்ணாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் தேவராஜே கவுடா மூலம் இந்த வீடியோ விவகாரத்தை கிளப்பினார். அதாவது பிரஜ்வல்லை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அவர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த சமயத்தில் அவர் அளித்த பேட்டியில், ‛‛ரேவண்ணா என்னை மோசமானவர் என அழைக்கிறார். ஆனால் அவரது மகன் மிகவும் மோசமானவர். ஆபாச வீடியோ, போட்டோக்கள் வெளியான வழக்கில் அவர் தடை வாங்கி உள்ளார். பெண் ஒருவருடன் நான் நெருக்கமாக இருக்கும் வீடியோவை அவர்களால் காட்ட முடியுமா?. ஆனால் என்னால் முடியும். மேலும் நான் அவர்களை போல் அல்லாமல் தினமும் என் வீட்டுக்கு செல்பவன். ரேவண்ணா மகன் பிரஜ்வல்லின் ஆபாச வீடியோ, போட்டோக்கள் பற்றி அவர்களின் முன்னாள் டிரைவர் மூலம் நான் அறிந்து கொண்டேன். ஆனாலும் டிரைவருக்கு எப்படி அந்த வீடியோ கிடைத்தது என்பது தெரியவில்லை'' என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தான் இந்த குற்றச்சாட்டை கார்த்திக் இதற்கு முன்பு மறுத்து இருந்தார். இதையடுத்து தேவராஜே கவுடா பாதிக்கப்பட்ட பெண்களை பத்திரிகையாளர்கள் முன்பு நிறுத்த முயன்றார். ஆனால் கடைசி நேரத்தில் பெண்கள் வரவில்லை. இது தேவராஜே கவுடாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛பெண்களின் மானத்தை கருதி நான் வீடியோ வெளியிடவில்லை. மேலும் வீடியோ வெளியிட்டால் அது அவர்களின் குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் எந்த பெண்ணாவது தற்கொலை செய்தால் யார் பொறுப்பேற்க முடியும்?'' என தெரிவித்து இருந்தார்.
ஆனால் ஹாசன் தொகுதி தேர்தலுக்கு ஒருநாள் முன்பாகவே அந்த தொகுதி முழுவதும் பிரஜ்வல் ரேவண்ணாின் ஆபாச வீடியோ அடங்கிய பென் ட்ரைவ் பலருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதோடு அதில் உள்ள வீடியோக்கள் வலைதளங்களில் பரப்பப்பட்டன. இந்நிலையில் தான் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக மாஜி டிரைவர் கார்த்திக் அளித்த பேட்டியில், நான் ஆபாச வீடியோ பென்ட்ரைவை தேவராஜே கவுடாவிடம் மட்டுமே வழங்கி உள்ளதாகவும், தான் வீடியோ பரப்பவில்லை எனவும் கூறியுள்ளார். ஆனால் தேவராஜே கவுடா, கார்த்திக் தான் பென்ட்ரைவை காங்கிரஸிடம் வழங்கி வெளியிட்டு இருக்கலாம் என்கிறார். இவர்கள் கார்த்திக், தேவராஜே கவுடா இடையே தற்போது இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் வீடியோவை பரப்பியது தொடர்பாக இருவரிடமும் எஸ்ஐடி விசாரணை நடத்தப்பட உள்ளது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications