‛‛300 பெண்களுடன் உல்லாசம்’’.. பிரஜ்வல் ரேவண்ணா வென்றால் எம்பியாக தொடர்வாரா? என்ன நடக்கும்?
பெங்களூர்: 300க்கும் அதிகமான பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகவும், அதுதொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில் தேவகவுடாவின் பேரன், ஜேடிஎஸ் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் வேட்பாளராக ஹாசனில் அவர் போட்டியிட்டுள்ள நிலையில் தற்போது கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் வரும் தேர்தலில் அவர் வெற்றி பெற்றால் எம்பியாக தொடர்வாரா? இல்லையா? என்பது பற்றிய விபரம் வருமாறு:
முன்னாள் முதல்வர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா. இவர் ஹாசன் மாவட்டம் ஹொலேநரசிப்புரா எம்எல்ஏவாக உள்ளார். ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் ஜேடிஎஸ் கட்சியின் ஹாசன் எம்பியாக உள்ளார். தற்போதைய லோக்சபா தேர்தலில் பாஜகவுடன், ஜேடிஎஸ் கூட்டணி வைத்துள்ளார். பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் ஹாசனில் ஜேடிஎஸ் சார்பில் களமிறங்கி உள்ளார்.

கடந்த 26ம் தேதி இந்த தொகுதிக்கு தேர்தல் முடிவடைந்தது. இதற்கிடையே தான் பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களுடன் சேர்ந்து நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் பரவ தொடங்கியது. தேர்தலுக்கு முன்பே இந்த வீடியோக்கள் பரவிய நிலையில் நேற்று முன்தினம் விஸ்வரூபம் எடுத்தது.
பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் உள்ள பெண்கள், உதவி கோரி வரும் பெண்கள், அரசு பெண் அதிகாரிகள் என 300க்கும் அதிகமானவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோவாக எடுத்து அதனை வைத்து மீண்டும் மீண்டும் மிரட்டியதாகவும், இதுதொடர்பாக 2,976 வீடியோக்களை பென்டிரைவில் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோக்கள் தான் தற்போது வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கர்நாடகா மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரியிடம் புகாரளித்த நிலையில் முதல்வர் சித்தராமையா சிறப்பு விசாரணை குழு விசாரைணக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தான் பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக ஜேடிஎஸ் தலைவரும், அவரது சித்தப்பாவுமான குமாரசாமி அறிவித்துள்ளார். தற்போது பிரஜ்வல் ரேவண்ணா பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் வேட்பாளராக தான் எம்பியாக உள்ள ஹாசன் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அந்த தொகுதிக்கு கடந்த 26ம் தேதி தேர்தல் முடிந்துள்ளது. இந்நிலையில் தான் கட்சியில் இருந்து தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று உப்பள்ளியில் நடக்கும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பிரஜ்வெல் ரேவண்ணா நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஒருவேளை அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டால் ஹாசன் தொகுதி ரிசல்ட்டில் வெற்றி பெற்று எம்பியாக தொடர்வாரா? இல்லையா? அடுத்து என்ன நடக்கும்? என்பது தொடர்பாக பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. அதற்கான விடை வருமாறு: அதாவது தற்போது பிரஜ்வல் ரேவண்ணா எம்பியாக உள்ளார். அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இன்று கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. பிரஜ்வல் ரேவண்ணா தற்போது எம்பியாக உள்ளார். அவரது எம்பி பதவிக்காலம் ஜுன் மாதம் முடிவுக்கு வருகிறது. இதனால் அவர் எம்பி பதவியை ராஜினாமா செய்யமாட்டார். மேலும் ஹாசன் தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிட்டுள்ளார். ஒருவேளை தேர்தல் முடிவில் அவர் வெற்றி பெற்றாலும், தொடர்ந்து எம்பியாகவே இருப்பார்.
ஏனெ்றால் ஒரு கட்சியில் இருந்து எம்பியாக வெற்றி பெறுபவர் அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் அந்த பதவியில் தொடர அரசியலமைப்பு சட்டம் வழிவகுக்கிறது. ஆனால் அவரால் ஜேடிஎஸ் கட்சி எம்பியாக தொடர முடியாது. சுயேச்சை எம்பியாக தான் இருப்பார். அதன்படி லோக்சபாவில் சுயேச்சை எம்பிக்கான இருக்கை வழங்கப்படும். இப்படி சுயேச்சையாக பிரஜ்வல் ரேவண்ணா இருக்கும்போது அவர் பிற கட்சியில் இணைந்து செயல்படலாம்.
ஆனாலும் ஒரு சிக்கல் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு உள்ளது. அதாவது ஒரு எம்பியை தகுதி நீக்கம் செய்ய லோக்சபா சபாநாயகருக்கு உரிமை உள்ளது. ஆனால் அதற்கும் சில வழிமுறைகள் உள்ளது. அதாவது எம்பியாக இருப்பவர் மனநலம் பாதித்தாலோ, இந்திய குடியுரிமையை மாற்றினாலோ அல்லது ஏதேனும் ஒரு வழக்கில் 2 ஆண்டுக்கும் அதிக தண்டனை பெற்றால் மட்டுமே தகுதி நீக்கம் செய்யலாம்.
இல்லாவிட்டால் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு மாற்று கட்சிக்கு ஆதரவாக ஓட்டளித்தால் கட்சி மேலிடத்தின் கோரிக்கையை ஏற்று தகுதி நீக்கம் செய்ய முடியும். அப்படி பார்த்தால் இந்த வழக்கில் பிரஜ்வ்ல ரேவண்ணாவுக்கு 2 ஆண்டுக்கும் அதிகமான சிறை தண்டனை வழங்கப்பட்டால் அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் அவர் எம்பியாகவே தொடர்வார்.












Click it and Unblock the Notifications