300 ஆபாச வீடியோ-ஜேடிஎஸ்-ல் இருந்து தேவகவுடா பேரன் பிரஜ்வல் டிஸ்மிஸ்? சித்தப்பா குமாரசாமி குஷி?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: 300 பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோக்களால் சிக்கிய ஹாசன் தொகுதி ஜேடிஎஸ் எம்பியும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமாகிய பிரஜ்வல் ரேவண்ணா மீது அரசு நடவடிக்கை எடுத்தால் வரவேற்போம் என அக்கட்சி எம்.எல்.ஏ. ஜிடி தேவே கவுடா தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் வேட்பாளராக சிட்டிங் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட்டுள்ளார். இத்தொகுதியில் ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

Obscene Videos Prajwal Revanna to be ousted from JDS

இந்த வாக்குப் பதிவுக்கு முன்னதாக பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய 300க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் ஹாசன் தொகுதி முழுவதும் பரவியது. வாட்ஸ் அப்கள், பென் டிரைவ்களில் இந்த வீடியோக்கள் பகிரப்பட கர்நாடகா அரசியலில் பெரும் பிரளயமே ஏற்பட்டது.

இது தொடர்பாக மாநில அரசு விசாரிக்க வேண்டும் என பெண்கள் ஆணையம் வலியுறுத்தியது. இதனையடுத்து எஸ்ஐடி விசாரணைக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா இந்தியாவை விட்டு தப்பி ஓடிவிட்டார்.

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் எந்த கருத்தும் தெரிவிக்கமாட்டோம் என பாஜக திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்த பிரச்சனை தொடர்பாக ஜேடிஎஸ் எம்.எல்.ஏ. ஜிடி தேவே கவுடா கூறியதாவது: பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடியோக்களை நாங்கள் இதுவரை பார்க்கவில்லை. எங்களுக்கு அது பற்றி எதுவும் தெரியாது.

தற்போது பிரஜ்வல் வீடியோக்கள் தொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதை நாங்கள் வரவேற்போம். பிரஜ்வல் ரேவண்ணா மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை மேலிடம்தான் முடிவெடுக்கும். தற்போதைய நிலையில் மாநில அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். இவ்வாறு ஜிடி தேவே கவுடா தெரிவித்தார்.

குமாரசாமி குஷி?: தேவகவுடா குடும்பத்தில் மகன்கள் ரேவண்ணா, முன்னாள் முதல்வர் குமாரசாமி இடையே எப்போதும் மோதல்தான். மண்டியா தொகுதியை குமாரசாமியும் ஹாசன் தொகுதியை ரேவண்ணாவும் 'பங்கு' போட்டுக் கொண்டது போலதான் அரசியல் நடவடிக்கைகள் எப்போதும் இருக்கும். ஹாசன் தொகுதிக்குள் குமாரசாமி நுழைவதும் கிடையாது; மண்டியா பக்கம் ரேவண்ணா போவதும் கிடையாது. தற்போது ரேவண்ணா மகன் பிரஜ்வல், ஆபாச வீடியோவில் சிக்கி இருப்பதும் அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்பதும் சித்தப்பா குமாரசாமிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் குஷியை தந்துள்ளது என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+