ட்விஸ்ட்.. கண்டுக்காத இஸ்லாமியர்கள்.. கர்நாடகாவில் எல்லா தொகுதியிலும்.. ஒவைசி கட்சி டெபாசிட் காலி
பெங்களூர்: கர்நாடகாவில் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் தோல்வி அடைந்து உள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை காங்கிரஸ் கட்சி பதிவு செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.

நேற்று அங்கு எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மஜத மொத்தம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இஸ்லாமியர்கள் - மத பிரச்சனை
இந்த தேர்தலில் இஸ்லாமியர்கள் தொடர்பான மத பிரச்சனைகள் பெரிய அளவில் கவனம் பெற்றன.
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரி வருவதற்கு ஒருதரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு சமூக மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், சில நாட்களிலேயே இந்த விவகாரம் கர்நாடகாவில் உள்ள மற்ற கல்லூரிகளிலும் காட்டுத் தீ போல பரவியதுடன், வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. இதையடுத்து, கல்வி நிலையங்களில் ஹிஜாபை அணிந்து வர கர்நாடகா அரசு தடைவிதித்தது. பின்னர் உச்ச நீதிமன்றமும் இந்த தடை செல்லும் என்று அறிவித்தது.
இது போக உடுப்பியில் உள்ள ஹொஸா மார்குடி கோவிலில் நடக்கும் விழாவில் இஸ்லாமியர்கள் கடை போட தடை விதிக்கப்பட்டது.இங்கு எல்லா வருடமும் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கடை போட்டு வந்தனர். இந்த வருடம் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகாவில் ஹலால் பொருட்களை வாங்க கூடாது என்றும் இந்துக்கள் இடையே பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
இது போக இஸ்லாமியர்களின் கடைகளை புறக்கணிக்க வேண்டும் என்று கடுமையாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இப்படி இந்துக்கள் இஸ்லாமியர்கள் இடையிலான பிரிவினை, மத மோதல் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. இந்த நிலையில்தான் அங்கு வழிபாட்டு தளங்களில் லவுட் ஸ்பீக்கர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலில் சிக்மகளூர் நகராட்சியில் இந்த கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகாவில் மற்ற பகுதிகளிலும் மசூதிகள், சர்ச்கள், கோவில்களில் இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. காற்று மாசு ஏற்படுத்துவதாக கூறி இந்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. மசூதிகளில்தான் அதிகமாக ஸ்பீக்கர் இருக்கும் என்பதால் அங்கே இந்த தடை தீவிரமாக நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. அங்கே மதம் பெரிய பிரச்சனையாக உள்ள நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக மதம்தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டது.
13 சதவிகித இஸ்லாமியர்கள்
அங்கே 13 சதவிகித இஸ்லாமியர்கள் வாக்குகள் உள்ளன. இந்த நிலையில்தான் எஸ்டிபிஐ மற்றும் ஒவைசியின் கட்சி இரண்டுமே இங்கே போட்டியிடும் என்று அறிவித்தது. முதலில் 25 இடங்களில் போட்டியிடுவோம் என்று அறிவித்த ஒவைசி அதன்பின் 2 இடங்களுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்தார்.
ஏற்கனவே ஒவைசி கட்சி நகராட்சி தேர்தலில் சில இடங்களில் வென்று இருந்ததால் எங்கே வாக்குகளை பிரித்து காங்கிரசின் தோல்விக்கு காரணமாக இருந்துவிடுமோ என்று காங்கிரஸ் கட்சியினர் அச்சத்தில் இருந்தனர்.
ஆனால் கர்நாடகாவில் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் தோல்வி அடைந்து உள்ளது.
அதன்படி SDPI தனது 16 வேட்பாளர்களில் ஆறு பேரை கடலோர கர்நாடகாவில் நிறுத்தியது. கடலோர கர்நாடகா பொதுவாக இந்துத்துவ அரசியலின் மையமாக கருதப்படுகிறது.
இவற்றில் ஐந்து இடங்கள் - புத்தூர், மங்களூரு, பண்ட்வால், பெல்தங்கடி மற்றும் மூட்பித்ரி - தட்சிண கன்னடா மாவட்டத்தின் கீழ் வர கூடியது. ஆறாவது தொகுதி உடுப்பி மாவட்டத்தில் உள்ள கவுப் ஆகும்.
இதில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே எஸ்டிபிஐ டெபாசிட் வாங்கியது. நரசிம்மராஜாவில் அப்துல் மஜீத் 38,606 வாக்குகளைப் பெற்று 25 சதவீத வாக்குகளைப் பெற்றார். மங்களூரில் எஸ்டிபிஐ வேட்பாளர் ரியாஸ் ஃபரங்கிப்பேட்டை கிட்டத்தட்ட 10 சதவீத வாக்குகளைப் பெற்றார். மற்ற SDPI வேட்பாளர்கள் 4 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்று டெபாசிட் இழந்தனர்.
ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு, அதன் ஹுப்பள்ளி-தர்வாட் கிழக்கு வேட்பாளர் துர்கப்பா காசப்பா பிஜவாட் 5,600 வாக்குகள் பெற்றார். அதே நேரத்தில் அதன் பசவனா பாகேவாடி வேட்பாளர் அல்லாபக்ஷ் பிஜாபூர் வெறும் 1,472 வாக்குகளைப் பெற்றார். இரண்டு இடங்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தான் வென்றனர்.
இரண்டிலும் 10 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளை பெற்று ஒவைசி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். அங்கே 13 சதவிகிதம் இஸ்லாமியர்கள் இருந்தும் கூட ஒவைசி கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications